கொரோனா கால ஹீரோ வழக்கு: கோர்ட் தள்ளுபடி..

மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்து பிரஹன் மும்பை மாநகராட்சி நடிகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.அக்டோபர் 27, 2020 அன்று, மகாராஷ்டிரா பிராந்திய மற்றும் நகரத் திட்டமிடல் சட்டத்தின் பிரிவு 53 (1) இன் கீழ் சோனு சூட் மற்றும் அவரது மனைவி சோனாலிக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

அதன் ஆரம்ப திட்டத்தின் படி கட்டிடத்தைப் பழைய வடிவிலேயே மாற்ற வேண்டும் அல்லது மாற்றத்திற்கான அனுமதி பெற வேண்டும் என்று ஒரு மாத கால அவகாசம் அளித்தது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பை எதிர்த்து சவால் நகர சிவில் நீதிமன்றத்தில் சோனு சூட் வழக்கு தொடர்ந்தார். சிவில் நீதிமன்றத்தில் அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் உயர் நீதிமன்றத்தை நாடினார்.மாநகராட்சி அறிவிப்புக்கு எதிராக சோனு தாக்கல் செய்த மேல்முறையீடு மற்றும் இடைக்கால விண்ணப்பத்தை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நடிகரின் வேண்டுகோளைத் தள்ளுபடி செய்யும் போது, ​​நீதிபதி சவான், "பந்து இப்போது மாநராடி அலுவலகத்தில் உள்ளது என்றார். மாநகராட்சியிடம் தான் அதற்கான தீர்வு காண வேண்டும் என்ற வகையில் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.படங்களில் வில்லனாக நடித்த சோனு சூட்டை ரசிகர்கள் நிஜத்தில் கொரோனா கால ஹீரோவாக பார்க்கிறார்கள்.இவர் பிரபு தேவா நடித்த தேவி படத்தில் நடித்தவர். அருந்ததி, ஒஸ்தி என பல படங்களில் நடித்ததுடன் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளர். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்ட போது தொழில் நிமித்தம் காரணமாக வெளி ஊர்களிலிருந்து வந்து வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்டு அவரவர்களின் சொந்த ஊருக்கு பஸ், ரயிலில் அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை இதுபோல் மீட்டார். வெளி நாடுகளில் டாக்டர் படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்ப முடியாமலிருந்த மாணவர்களை விமானத்தில் அழைத்து வந்தார்.

மாடுகள் இல்லாததால் மகளை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கித் தந்தார். வெகுதூரம் என்பதால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்த வட நாட்டுக் கிராமம் ஒன்றைச் சேர்ந்த எல்லா மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள் வாங்கி தந்தார். இப்படி அவரது உதவி எண்ணில் அடங்காமல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் தனது சொத்துக்களை ரூ 10 கோடிக்கு அடமானம் வைத்து உதவிகளைத் தொடர்ந்தார். சோனு சூட்டின் நற்பணிகளால் ஈர்க்கப்பட்ட ஆந்திராவை சேர்ந்த ஒரு கிராம மக்கள் ஒன்று கூடி அவருக்கு கோயில் கட்டினார்கள். சோனு சூட் கடந்த மாதம் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் வந்தார். அப்போது இரவில் அவர் சாலையில் நடந்து சென்றபோது சாலையோரத்தில் அவரது பெயரில் ஒரு ஃபாஸ்ட் புட் கடை இருந்ததை கண்டு எதிர்பாராதவிதமாக அந்த ஓட்டலுக்கு சென்றார். அவரைக் கண்டு ஆச்சரியம் அடைந்த ஓட்டல் காரர் வரவேற்றார். கையேந்தி பவனாக இருந்த அந்த ஓட்டலில் என்னென்ன உணவுகள் கிடைக்கும் என்று விசாரித்த படி தோசைக் கல்லில் சோனு தோசை சுடத் தொடங்கினார். இந்த படங்கள் நெட்டில் வைரலானது. சமீபத்தில் டெய்லரிங் மிஷினில் அமர்ந்துகொண்டு சோனு சூட் துணி தைப்பதுபோல் இருக்கும் ஒரு படம் வெளியிட்டு, சோனு சூட் டெய்லர் ஷாப் என்று தலைப்பிட்டதுடன். இங்கு இலவசமாகத் துணிகள் தைக்கப்படும். பேண்ட் சில சமயம் நிக்கர் ஆகிவிடும். துணிகளின் தையல்களுக்கு காரண்டி எதுவும் கிடையாது என காமெடியாக குறிப்பிட்டு இருந்தார்.

More News >>