2017-ம் ஆண்டின் டிராவல் பைக்: தி டார்க் ஹார்ஸ்

நீண்ட தூரப் பயணங்களுக்காக, இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு அறிமுகம்தான் டார்க் ஹார்ஸ்.

சாலைகளில் பறக்கும் படகாக, இந்தியன் சீஃப்டைன் டார்க் ஹார்ஸ் தோற்றமளிக்கிறது. இந்த டூரிங் பைக்கின் நீளம் 8.5 அடி; 377 கிலோ எடை. எளிய, நேர்த்தியான வடிவம்கொண்ட இந்த டார்க் ஹார்ஸ் பைக்கில் வசதியான இருக்கைகள், காற்று முகத்தில் அறைவதைத் தடுக்கும் விண்ட் ஷீல்டு, எலெக்ட்ரானிக் முறையில் சாவியில்லாமல் இயங்கும் திறன்கொண்ட பட்டன் ஸ்டார்ட்டர் ஆகிய வசதிகள் உள்ளன. நெரிசல் மிகுந்த சாலைகளுக்காக இல்லாமல், நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் சொகுசாகப் பயணிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது, இந்தக் கறுப்பு குதிரை.

ஒரு பக்கா டூரிங் பைக்குக்குத் தேவையான அனைத்து அம்சங்களும்கொண்ட ரோடுமாஸ்டரில் இருக்கக்கூடிய சில முக்கிய அம்சங்கள் இங்கே மிஸ் ஆனாலும், ரைடர்களைக் கவருவதற்காகவே 100 வாட் திறன்கொண்ட ஸ்பீக்கர்கள், ப்ளூ-டூத் வசதி, ஸ்மார்ட்போன் இணைத்துக்கொள்ளக்கூடிய மியூசிக் சிஸ்டம், எஃப்.எம் ரேடியோ என வசதிகளில் அள்ளுகிறது.

தற்போது 2017-ம் ஆண்டின் அறிமுகங்களில் இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸின் சிறந்த டிராவல் பைக் என்ற பெருமையை டார்க் ஹார்ஸ் பெற்றுள்ளது.

More News >>