ஐபிஎல் தொடரில் ரூ.100 கோடி சம்பாதித்தியம்.. 4-வது வீரராக இணைந்தார் சின்ன தல ரெய்னா!
ஐபிஎல் தொடரில் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பாதித்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் தற்போது இணைந்துள்ளார். வரும் 2021 ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான ஐபிஎல் மினி ஏலம் அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே, பிசிசிஐ அளித்த அவகாசம் படி, ஐபிஎஸ் தொடரில் உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் உள்ள வீரர்களை தக்கவைத்ததோடு விடுவிக்கவும் செய்துள்ளது.
குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோருடன் தற்போது சின்ன தல சுரேஷ் ரெய்னாவை 2021 தொடருக்காக தக்கவைத்தது. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 100 கோடிக்கும் அதிக வருவாயை ஈட்டிய ஐபிஎல் வீரர்கள் பட்டியிலில் ரெய்னா 4வது வீரராக இணைந்துள்ளார்.
இன்சைடுஸ்போர்ட் மணிபால் என்ற ஊடகத்தில் வெளியான தகவலில் படி,14-வது ஐபிஎல் தொடருக்கு தக்கவைக்கப்பட்டதன் மூலம் ரூ.11 கோடி பெறும் ரெய்னாவின் சம்பாத்தியம் ஐபிஎல் மூலம் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. ரெய்னா 2008 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்ட அந்த 2 ஆண்டு காலம் ரெய்னா குஜராத் லயன்ஸ் அணிக்கு விளையாடினார். 2018-ல் மீண்டும் சிஎஸ்கே வந்த போது ரெய்னா மீண்டும் தல டோனியுடன் இணைந்தார்.