விந்தணுவை பெருக்கும்... சிறுநீரக கற்களை போக்கும்...மஞ்சள் காமாலைக்கு மருந்து... எது தெரியுமா?
குளிர் காலத்தில் அதிகமாக தண்ணீர் அருந்த மனமிருக்காது. ஆனால், உடலில் தண்ணீர் சேர வேண்டும். அதற்காக வெவ்வேறு சுவை இயற்கை பானங்களை அருந்தலாம். அப்படி அருந்தக்கூடியது கரும்பு சாறு ஆகும். கரும்பு சாறு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்.உலகத்திலுள்ள மொத்த சர்க்கரையில் 70 சதவீதம் எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா? கரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. உலகத்தில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு கரும்பு இந்தியாவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் வளரும் கரும்பிலிருந்து வெல்லம், நாட்டுச்சர்க்கரை ஆகியவை எடுக்கப்படுகின்றன. அதன் பின்னர் அது கந்தகம் மற்றும் வேதிப்பொருள்களால் சுத்திகரிக்கப்படுகிறது.
கரும்பிலுள்ள ஊட்டச்சத்துகள்
ஒரு தம்ளர் (28.35 கிராம்) கரும்பு சாற்றில் ஆற்றல் (எரிசக்தி) 26.56 கிலோ கலோரியும், கார்போஹைட்ரேட் 27.51 கிராமும், புரதம் 0.27 கிராமும், கால்சியம் (சுண்ணாம்பு சத்து) 11.23 மில்லி கிராமும், இரும்பு சத்து 0.37 மில்லி கிராமும், பொட்டாசியம் 41.96 மில்லி கிராமும், சோடியம் 17.01 மில்லி கிராமும் உள்ளது. மெக்னீசியமும் அடங்கியுள்ளது.கரும்பில் ஏராளமான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள்) உள்ளன. ஆகவே இது நோய்தொற்று எதிராக செயல்படும்; உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.
கரும்பு சாற்றின் நன்மைகள்
உடலிலிருந்து நீரைப் பிரிப்பதற்கு கரும்பு சாறு உதவுகிறது. சிறுநீர்ப்பாதையில் தொற்று இருந்தால் குணப்படுத்துகிறது. சிறுநீரக கற்களை உருவாவதை தடுத்து சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்ய தூண்டுகிறது.ஈரல் செயல்பாடு குன்றினால் பிலிருபின் என்ற பொருள் அதிகரித்து மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. ஈரல் (liver) நன்றாக வேலை செய்வதற்கு இது உதவுகிறது. ஆகவே, மஞ்சள் காமாலையை குணப்படுத்த கரும்பு சாறு பருகலாம். உடல் இழந்த புரதச் சத்தை கரும்புச் சாறு மீண்டும் அளிக்கிறது.விந்துவின் தரத்தை அதிகரிக்கும் இயல்பு கரும்பு சாற்றுக்கு உள்ளது. ஆண்கள் கரும்பு சாறு பருகினால் குழந்தைப் பேற்றுக்கு அதிக வாய்ப்பு உண்டு.பாலூட்டும் தாய்மார் கரும்புச் சாறு பருகினால் பால் அதிகமாக சுரக்கும்.மாதவிடாய் கோளாறு மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் வலி ஆகியவற்றை கரும்பு சாறு போக்கும்.
மாதவிடாயில் பிரச்னை இருந்தால் மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு கரும்புச் சாறு பருக வேண்டும்.இரத்தத்தில் பிளாஸ்மா மற்றும் உடலில் திரவத்தின் அளவை கரும்பு சாறு அதிகரிக்கும். ஆகவே, உடல் வறட்சி மற்றும் அசதியை நீக்கும்.கரும்புச் சாறு பருகினால் குடல் நன்றாக வேலைசெய்யும். ஆகவே இது மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. மலச்சிக்கல் தீர கரும்புச் சாறு பருகலாம். வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தினால் பிரச்னை இருந்தால் தீர்க்கும் இயல்பு கரும்பு சாறுக்கு உண்டு.இரவில் அடிக்கடி எழுந்திருக்கிறீர்கள் என்றால் காலையில் ஒரு தம்ளர் கரும்பு சாறு பருகினால் பிரச்சனை மாறும்.
பற்சிதைவையும் வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் குணம் கரும்பு சாற்றுக்கு உள்ளது.கரும்பு சாறு எப்படி பருகவேண்டும்? கரும்பு சாறு புதிதாக பிழிந்து பருகுதல் நலம். பகல் பொழுதுக்கு முன்பு பருகுதல் நன்று. கரும்பு சாறு பருகும்போது பதற்றப்படாமல் அமர்ந்து நிதானமாக பருகவேண்டும்.