ESPN ன் சிறந்த வீரர்களுக்கான விருது!
ஓவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ESPN CRICINFO சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனது 14 வது விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது ESPN தளம். 2020 ம் ஆண்டில் விளையாடப்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை வெறும் 44 மட்டுமே. இது கடந்த ஆண்டில் விளையாடப்பட்ட போட்டியில், மூன்றில் ஒரு பங்கை விடக் குறைவு. எனினும் வீரர்களின் நேர்த்தியான ஆட்டத்திறமையினால், வீரர்களைத் தேர்வு செய்வது அவ்வளவு கடினமாக இல்லை எனத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு முறை சிறந்த இருபது ஓவர் வீரருக்கான விருதைப் பெற்ற மேக்ஸ்வெல், இம்முறை ஓல்ட்டிரஃபேர்டு மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 108 பந்துகளுக்கு 90 ரன்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்த காரணத்தால், சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேனுக்கான விருதை பெறுகிறார்.
இந்திய - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசலவுட், 8 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளருக்கான விருதைப் பெறுகிறார்.இந்த தொடரின் இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடி 112 ரன்களை அடித்து அணியை எழுச்சி பெறச் செய்த இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் அஜிங்கியே ரகானே டெஸ்ட் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் விருதைப் பெறுகிறார்.
டெஸ்ட் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் - அஜிங்கியே ரகானே.
டெஸ்ட் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர்- ஜோஷ் ஹேசலவுட்.
ஆண்கள் ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்- மேக்ஸ்வெல்
ஆண்கள் ஒருநாள் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர்- முசார்பானி
ஆண்கள் இருபது ஓவர் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன்- ஜானி பேர்ஸ்ட்டோ
ஆண்கள் இருபது ஓவர் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர்- லூக்கி பர்கியூசன்.
சிறந்த பெண் பேட்ஸ்வுமன்- அலிசா ஹீலி
சிறந்த பெண் பந்து வீச்சாளர் - பூனம் யாதவ்
இந்த ஆண்டின் சிறந்த புதுமுக வரவு - கீல் ஜேமிசன்