ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் வீட்டை மக்கள் பார்வையிட அனுமதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த வேதா நிலையம் எனப்படும் அவரது வீட்டை நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. வரும் 28 ஆம் தேதி முதல் இந்த வீடு பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என அமைச்சர்மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்களும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேதா நிலையத்தை மக்கள் பார்வையிட அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து அந்த இடத்தை பார்வையிடப் பல்லாயிரக்கணக்கான மக்களும் அதிமுக தொண்டர்களும் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட உள்ளது.

More News >>