மிலிட்டரி ஸ்டாண்டர்ட் டெஸ்டிங்... குவார்ட் காமிரா எல்ஜி கே42 அறிமுகம்

யூஎஸ் மிலிட்டரி டிபன்ஸ் ஸ்டாண்டர்ட் என்னும் தரக் குறியீடு பெற்று விற்பனைக்கு வந்துள்ளது எல் ஜி நிறுவனத்தின் எல்ஜி கே 42 என்ற ஸ்மார்ட்போன். மிலிட்டரி கிரேடு எம்ஐஎல்-எஸ்றிடி-810ஜி என்று இச்சான்றிதழ் கூறப்படுகிறது. இந்த தரச்சான்று அதிகமான மற்றும் குறைவான வெப்பநிலை, வெப்ப அதிர்ச்சி, நடுக்கம், அதிர்ச்சி மற்றும் ஈரப்பதம் உள்ளிட்ட பல நிலைகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்து வழங்கப்படுகிறது. எல்ஜி கே 42 ஸ்மார்ட்போன் இரண்டாவது ஆண்டுக்கு இலவச வாரண்டியுடன் வந்துள்ளது.

எல்ஜி கே42 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

சிம் : இரட்டை (நானோ) சிம்தொடுதிரை : 6.6 அங்குலம் எச்டி+; 720X1600 பிக்ஸல் தரம்இயக்கவேகம் : 3 ஜிபிசேமிப்பளவு : 64 ஜிபிமுன்புற காமிரா: 8 எம்பி ஆற்றல்பின்புற காமிரா: 13 எம்பி + 5 எம்பி (சூப்பர் வைட் ஆங்கிள்) + 2 எம்பி + 2 எம்பி ஆற்றல் (குவாட் காமிரா)பிராசஸர் : மீடியாடெக் ஹீலியோ பி22 (எம்டி6762) SoCமின்கலம் : 4000 mAhஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 10; எல்ஜி யூஎக்ஸ்எடை : 182 கிராம்

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட், பக்கவாட்டில் விரல்ரேகை உணரி (ஃபிங்கர்பிரிண்ட் சென்ஸார்) 3டி சவுண்ட் எஞ்ஜின், கூகுள் அசிஸ்டெண்டுக்கு தனி பொத்தான், கேம் லாஞ்சர் கொண்ட எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ரூ.10,990/- விலையில் ஃபிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

More News >>