ஐபிஎல் போட்டி : சென்னையை வீழ்த்திய பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றது.
ஐபில் தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனியும், பஞ்சாப் அணியின் கேப்டனாக அஷ்வினும் மோதும் முதல்போட்டி என்பதால் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி கெயிலின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 197 ரன்களை குவித்தது. இதில், கெயில் 33 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.இதனால், சென்னை அணிக்கு 198 ரன்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க ஆட்டக்காரர்களாக, ஷேன் வாட்சன், முரளி விஜய் ஆடினர். வாட்சன் 11 ரன்னிலும், முரள விஜய் 12 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து, ஆடிய அம்பதி ராயுடு 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், பில்லிங்ஸ் 9 ரன்கள் எடுத்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், ஜடேஜா 19 ரன்னில் அவுட்டானார். தோனி சதமடித்த நிலையில், பிராவோ தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இவர்களது ஆட்டத்தில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 12 ரன்கள் மட்டுமே எடுத்து சென்னை அணி தோல்வி அடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முதலாக தோல்வி அடைந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com