பாய்ஃபிரண்டு மீது கால் நீட்டி படுத்து சமந்தா நெருக்கம்.. ரசிகர்கள் கோபத்தால் பரபரப்பு ..
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு பின்னால் திருமணம் ஆன ஜோடிகள் குழந்தைக்குப் பெற்றோர் ஆகிவிட்டனர். ஆனால் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தை தள்ளி வைத்திருக்கிறார் அதற்கு காரணம் அவர் இன்னமும் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் தமிழில் ஹீரோயினான சமந்தா அதைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, நீ தானே என் பொன் வசந்தம், நான் ஈ. கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழி தெலுங்கு என இரு மொழியிலும் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.
தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாராவும் இப்படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கில் 8 மாதமாக வீட்டிலிருந்த சமந்தா மாடித் தோட்டம் அமைப்பது. யோகா மற்றும் பேஷன் டிசைனிங் கற்பது எனப் பொழுதைக் கழித்தார். தினமும் யோகா பயிற்சி செய்யும் சமந்தா உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார். மேலும் பேஷன் டிசைனிங் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தியும் வருகிறார். இதற்கிடையில் தி பேமலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் நெகடிவ் வேடம் ஏற்று நடித்து வருகிறார். இது இந்தி வெப் சீரிஸ்.
இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை ஏற்க மறுத்து விடுகிறார் சமந்தா. ஆனால் இந்தி ரசிகர்களிடம் தனது நடிப்பு சென்று சேர வேண்டும் என்று எண்ணுகிறார். அதனால் தான் இந்தி வெப் சீரிஸில் அவர் நடிக்கிறாராம். அவரது இந்த புதுபாலிசி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்த மாதம் இந்த வெப் சீரிஸ் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.சமந்தா மார்டன் உடைகள் நீச்சல் உடைகள் அணிவதில் விருப்பம் உள்ளவர். அவர் நீச்சல் உடையில் கவர்ச்சியாக உடை அணிந்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட போது சைதன்யாவின் ரசிகர்கள் ஏற்கவில்லை. பாரம்பரியமுள்ள குடும்பத்தில் மருமகள் ஆகிவிட்டீர்கள் இன்னமும் இதுபோல் கவர்ச்சிக்கு இடம் தரலாமா என்று சமந்தாவைத் திட்டி தீர்ந்தனர். அதன்பிறகு நீச்சல் உடை படங்கள் வெளியிடுவதைத் தவிர்த்தார். கடந்த ஆண்டில் மாலத்தீவுக்கு சென்றார். அங்கு சென்ற பல நடிகைகள் நீச்சல் உடையில் படங்களை வெளியிட்ட போதும் சமந்தா மட்டும் வெளியிடாமல் தவிர்த்தார்.
இந்நிலையில் நேற்று சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட படம் மீண்டும் அவரை சர்ச்சையில் சிக்க வைத்திருக்கிறது. செலப்ரிட்டியான ஸ்டைலிஸ்ட் பிரீதம் ஜுகல்கெர் சமந்தாவின் நண்பர் ஆவார். ஷோபா ஒன்றில் படுத்திருக்கும் சமந்தா தனது கால்களை ஸ்டைலிஸ்ட் மடி மீது நீட்டி இருக்க அவர் கால் மீது அந்த நபர் தனது கைகளை ரிலாக்ஸாக வைத்துச் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார். பாய்ஃபிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் இந்த படத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சைதன்யா ரசிகர்கள் சமந்தாவை காய்ச்சி எடுக்கத் தொடங்கினார்கள். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சமந்தா உடனே அந்த படத்தை இன்ஸ்டாகிராமிலிருந்து நீக்கினார். அதற்குள் அப்படம் வலைத்தளங்களில் பரவத் தொடங்கியது.இந்நிலையில் அந்த பாய் ஃபிரண்டு சமந்தாவுக்கு ஐ லவ் யூ சொல்லி மெசேஜ் பகிர்ந்தார். இது ரசிகர்களைக் குழப்பத்திலும், கோபத்திலும் ஆழ்த்தியது.