ரஜினி பட இயக்குனர் தயாரிப்பில் யோகி பாபு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத் தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களைத் தயாரிப்பதாக அறிவித்தார்.

அதில், ஒன்றுதான் குதிரை வால். இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம் பெற்று கவனம் ஈர்த்தது.காலா படத்துக்குப் பிறகு படம் இயக்காமலிருந்த பா.ரஞ்சித் தற்போது சார்பட்டா பரம்பரை என்ற படம் இயக்கி உள்ளார். இதில் ஆர்யா பாக்ஸிங் வீராக நடிக்கிறார். இதற்காக அவர் உடலைக் கட்டுமஸ்தாக்கி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

தற்போது ரஞ்சித் நடிகர் யோகிபாபு நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார். தனது நீலம் புரடொக்‌ஷன்ஸ் அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளைத் தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்.பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு வெற்றியினைத் தொடர்ந்து "ரைட்டர்" படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடக்ஷன்ஸ். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். 'பொம்மை நாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.

யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.படப்பிடிப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் கலந்துகொண்டு படப்பிடிப்பைத் துவங்கி வைத்திருக்கிறார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். ஆர்.கே.செல்வா எடிட்டிங் செய்கிறார். ஜெயரகு கலை அமைக்கிறார். கபிலன், அறிவு படல்கள் எழுதுகின்றனர். யாழி பிலிம்ஸ் வேலவன், லெமு வேல். இணை தயாரிப்பு செய்கின்றனர். பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.

More News >>