தொடர் சரிவில் தங்கத்தின் விலை! 23-01-2021
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. 2020 ம் ஆண்டின் இறுதி வரை நிலையான விலையில்லாமல், ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது வந்தது தங்கத்தின் விலை. இந்த புது ஆண்டிலாவது தங்கத்தின் விலை உயராதா? என்ற ஏக்கத்தோடு காத்துக்கொண்டு இருந்தனர் தங்க முதலீட்டாளர்கள். ஆனால் மறுபுறம் தங்கத்தின் விலை இன்னும் குறைந்தால், பரவாயில்லை என்ற இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பும், நடுத்தர மற்றும் பெண்களின் ஈர்ப்பையும், எதிரப்பார்ப்பையும் அறிய முடிகிறது. பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும் தான் வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
எனினும் 2021 புது வருடம், கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசி சோதிப்பு என பல்வேறு சாதகமான செயல்கள் உலக சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வாயப்புள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4660 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து, கிராமானது ரூ.4655 க்கு விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கம் (22k)
1கிராம்- 46558 கிராம் (1 சவரன்) - 37240
துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5044 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.5 குறைந்து, கிராமானது ரூ.5039 க்கு விற்பனையாகிறது.
தூய தங்கம்(24k)
1 கிராம் - 50398 கிராம் - 40312
வெள்ளியின் விலை
தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்குச் சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது கிராமிற்கு 10 பைசா குறைந்து, இன்று கிராமானது ரூ.71.40 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.71400 க்கு விற்பனையாகிறது.