ஓசூர் நிதி நிறுவனத்தில் 12 கோடி கொள்ளை ம.பி. கொள்ளையர் 6 பேர் கைது
ஓசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 12 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி அங்கிருந்த 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் பலகைகள் வைக்கப்பட்டிருந்த பைகளில் உள்ள ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றின் மூலம் கொள்ளையர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டனர். இன்று காலை கர்நாடக மாநிலத்தில் வைத்து ஆறு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர் இவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது அவர்களிடமிருந்து 12 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், மற்றும் 7 துப்பாக்கிகளும் இரு கட்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன