ஓவல் அலுவலக மேசையில் டிரம்ப் வைத்த பட்டனை அகற்றிய பைடன்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப இருந்தபோது அவரது மேசையில் வைக்கப்பட்டிருந்து டயட் கோக் பட்டனை தற்போது அதிபர் ஜொ பைடன் அகற்றியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜொ பைடன் கடந்த 20-ம் தேதி அமெரிக்காவில் 46-வது அதிபராக பதவியேற்றார். இந்நிலையில், அதிபராக பதவியேற்றதில் இருந்து பைடன் வெள்ளை மாளிகை பகுதியில் பல்வேறு அலங்கார மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒருபகுதியாக, அமெரிக்காவின் 45-வது அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் இருந்த போது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக மேசையில் ஒரு சிவப்பு நிற பட்டனை வடிவமைத்து வைத்திருந்தார். இந்த ரெட் பட்டனை டிரம்ப் அழுத்தினால், அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்யும் பட்டன் என்று செய்திகளும் முன்னதாக பரவியது. ஆனால், உண்மையில் அந்த பட்டனை டிரம்ப் அதற்காக வைக்கவில்லை. கோக் மீது அதிகம் பிரியம் கொண்ட டிரம்ப், கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இதனை ஓவல் மேசையில் உருவாக்கி வைத்திருந்தார்.

இந்த பட்டனை டிரம்ப் அழுத்தும் போதெல்லாம், அலுவலகப் பணியாளர்கள் அவருக்கு டயட் கோக் கொண்டுவந்து கொடுப்பார்கள். இப்படி ஒருநாளைக்கு 12 கோக்குகள் வரை டிரம்ப் குடிப்பது வாடிக்கை என்று வெளிகை மாளிகையில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜொ பைடன், டிரம்பின் கோக் பட்டனை அகற்றியுள்ளனர்.

More News >>