பிரபல நடிகை ஜிம் கூட்டணி.. இது வலுவான பெண்கள் படை..
நடிகைகள் ரகுல் ப்ரீத், கங்கனா, டாப்ஸி, தமன்னா என பல நடிகைகள் ஜிம்மில் பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கின்றனர். பல நடிகைகள் ஜிம்மிற்க்கு சென்றோமா பயிற்சி முடித்து விட்டு கிளம்பினோமா என்றிருக்கிறார்கள். நடிகை தமன்னா அப்படி இல்லை. அவருக்கு ஜிம்மில் சில தோழிகள் இருக்கிறார்கள். இவர்கள் ஜிம்மில் டீமாக உடற்பயிற்சி செய்து ரிலாக்ஸ் நேரத்தில் அரட்டை கச்சேரி நடத்துகின்றனர். அந்த பெண்கள் படையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தமன்னாவும் 3 மாதங்களுக்கு முன் ஐதராபாத்துக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் என உறுதியானது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு தன்னை தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார்.
3 வாரங்கள் அவர் தனிமையிலிருந்தார். இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்டார். தனிமையிலிருந்த அவர் இதையடுத்து வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வில் இருந்தார். உடற்பயிற்சி செய்து ஷூட்டிங் செல்ல தயார்படுத்தினார். உடனடியாக ஷூட்டிங்கிலிருந்து அழைப்பு வரவே படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். படப்பிடிப்புகளை முடித்துக் கொடுத்துவிட்டு கொரோனாவிற்கு முந்தைய தனது உடற்கட்டு மற்றும் எனர்ஜியை திரும்ப பெற முடிவு செய்தார். தொடர்சியாக உடற் பயிற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் கொரோனா பாதிப்பிற்கு முன்பிருந்த உடல் கட்டு ஆரோக்கியத்தை மீட்டார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டு தமன்னா, நீங்கள் கடுமையான பயிற்சி என்ற பெயரில் உடலை வருத்த வேண்டாம். தொடர்ச்சியாக 2 மாதங்கள் ப்ரேக் இல்லாமல் கண்காணிப்புடன் ஒர்க் அவுட் செய்தால் போதும் பழைய ஆரோக்கியத்துக்கு திரும்பலாம்.
இந்த நடைமுறையில் பயிற்சியில் ஈடுபட்ட எனக்கு கோவிட் பாதிப்புக்கு முன் எப்படி உடல் ஆரோக்கியம், எனர்ஜியுடன் இருந்தேனோ அப்படி திரும்ப வந்து விட்டேன் என்றார். தமன்னா படப்பிடிப்புக்கு சென்றுவிட்டால் அவரை ஜிம் தோழிகள் மிஸ் செய்கின்றனர். கொரோனா பாதிப்பிற்கு பிறகு ஜிம்மில் பயிற்சி மேற் கொண்டு வரும் தமன்னாவை ஜிம்மில் பார்த்ததும் அவரது தோழிகள் சூழ்ந்துகொண்டு நலம் விசாரித்தனர். பிறகு தோழிகளுடன் நின்று படம் எடுத்துக்கொண்ட தமன்னா அதை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு, பெண்கள் படை (Girl Squad). நாங்கள் வலுவான கூட்டணி என குறிப்பிட்டார். இந்த படத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த ஃப்ரஷ்னஸ் தமன்னா முகத்தில் தெரிகிறது. கருப்பு நிற டாப்ஸ் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார். தமன்னாவுக்கு தமிழில் பட வாய்ப்பு எதுவும் இப்போது இல்லை என்றாலும் தெலுங்கில் சீட்டிமார், குருதுண்டா சீதாகாலம், அந்தாதுன் ரீமேக் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார்.