`ஜூனியர் மோடி எனக்கு சொல்லித் தருகிறாரா?- சந்திரபாபு நாயுடு காட்டம்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, `அரசியலில் எனக்கு அடுத்து முதல்வராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி எனக்கு பாடம் சொல்லித் தரப் பார்க்கிறார்’ என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.

பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் நாயுடு, `ஆந்திராவுக்கு மத்திய அரசு, வளர்ச்சிக்காக கொடுப்பதாக சொன்ன நிதியை சரிவர கொடுக்கவில்லை. இனியும் எங்களால் இந்தத் துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள நாயுடு, `மத்திய அரசு, ஆந்திர மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை இழைத்துள்ளது. இதைக் கண்டித்து வரும் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போகிறேன். மோடியும் சில நாள்களுக்கு முன்னர், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கவில்லை என்பதற்காக உண்ணாவிரதம் இருந்தார்.

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு அவர்தானே காரணம். பிறகு எப்படி, அவரே உண்ணாவிரதம் இருக்க முடியும். 1995-ம் ஆண்டே முதல்வராக பொறுப்பேற்றவன் நான். ஆனால், எனக்கு பின்னர் 2002-ம் ஆண்டுதான் மோடி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் எனக்கு அரசியல் பாடம் எடுக்கப் பார்க்கிறார். அது நடக்காது’ என்று கொதித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>