மீம்ஸ்களால் கடுப்பான காயத்ரி ரகுராம்hellip ட்விட்டரிலிருந்து விலகுவதாக அறிவிப்பு!
நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் காயத்ரி ரகுராம். கடந்த ஆண்டு நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய `பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, மீண்டும் மீடியா வெளிச்சத்துக்கு வந்தார்.
பிக் பாஸ் மூலம் அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியே அதிகமாகக் கிடைத்தது. இது குறித்து, அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தன் பக்க நியாயம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தார். மேலும், காயத்ரி பாஜக-விலும் உறுப்பினராக இருக்கிறார்.
இந்நிலையில், இன்று திடீரென்று ட்விட்டர் மற்றும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து காயத்ரி, `இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. என்னை வைத்து பலர் மீம்ஸ்கள் போடுகின்றனர். என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குகின்றனர்.
இது குறித்து தமிழக பாஜக-வுக்கு தெரிவித்தாலும் பயனில்லை. அரசியலில் இருந்தால் பலருக்கு நல்லது செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், இப்போது அது முடியாது என்பதை புரிந்து கொண்டேன். இதுவே எனது கடைசி ட்வீட். தமிழகம் பாதுகாப்பானவர்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com