அழகான ஆண்கள்: காமெடி நடிகரை கலாய்த்த பிரபலம்..

கோலிவுட்டில் போட்டி நடிகர்கள்போல் நெருக்கமான நட்பு நடிகர்களும் உள்ளனர். இவர்கள் ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொண்டாலும் கோபித்துக்கொள்வதில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் , காமெடி நடிகர் சதீஷ் நெருக்கமான நண்பர்கள். சதீஷ் சேலத்தை சேர்ந்தவர். சமீபத்தில் லயோலா கல்லுரி மாணவர்கள் நடத்தி வெளியிட்ட கருத்துக்கணிப்பில், சேலத்தில் தான் அழகான ஆண்கள் அதிகம் உள்ளதில் முதலிடம் என்று புள்ளிவிவரம் வெளியிட்டது. டிவியில் பிரேக்கிங் செய்தியாக கார்ட் வடிவில் அது வெளியிடப்பட்டது. அதை நடிகர் சதீஷ் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதைக்கண்ட சிவகார்த்திகேயன் பதில் அளித்தார். அதில்,இந்த கருத்து கணிப்பு நீங்கள் (சதீஷ்) சென்னையில் செட்டிலானப்பறம் நடத்தப்பட்டது என்பதை தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மற்றும் அதனாலதான் சென்னை முதல் இடம் பிடிக்கவில்லை என்பதையும் தாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நன்றி வணக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதைக்கண்ட சதீஷ்,ரசிக, ரசிகைகள் யாரும் கடை அடைப்பிலோ, போராட்டத்திலோ, பேரணியிலோ ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது நண்பனின் அட்மின் செய்தது என்றும் இனி இவ்ளோ ஒப்பனா கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம் என சிவகார்த்திகேயன் டிவிட்டுக்கு பதில் அளித்தார். சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே சதீஷ் அவரது நண்பராக இருந்து வருகிறார். இருவரும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

More News >>