ஸ்ருதியின் புது காதலன் யார்?
நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு சூர்யாவுடன் எஸ்3 படத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடித்த படம் திரைக்கு வரைவில்லை. கிட்டதட்ட 3 வருடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இடைப்பட்ட காலத்தில் அவர் வெளிநாட்டு மேடைகளில் பாடல் பாடி மேற்கத்திய பாடகியாக மாறினார். பிறகு லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேலுடன் ஒரு வருடத்துக்கும் மேலாக டேட்டிங்கில் ஈடுபட்டார். அவரை திருமணம் செய்வார் என்றும் எதிர்ப்பார்த்தனர், கமல்ஹாசனும் லண்டன் சென்று மைக்கேல் கோர் சேல் குடும்பத்தினருடன் பேசினார். ஒரு கட்டத்தில் பாஃபிரண்டுடன் பிரேக் அப் செய்துகொண்டார் ஸ்ருதி. ஒன்றரை வருட இடைவெளிக்கு பிறகு நடிப்பு பக்கம் மீண்டும் கவனம் திருப்பினார். விஜய்சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார். பின்னர் தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் கொரோனா லாக்டவுன் அமலானதால் மும்பை வீட்டுக்குள் தனிமைப் படுத்திக்கொண்டார். 8 மாதம் அவர் வீட்டுக்குள்ளேயே பொழுதை கழித்தார். அந்த ஓய்வு நேரத்தில் ஆங்கில பாடல்கள் எழுத்தினார். இசை கம்போ சிங்கில் ஈடுபட்டார். பிறகு லாக்டவுன் தளர்வில் லாபம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பின்னர் தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தெலுங்கில் ராசி இல்லா நடிகை என்று ஸ்ருதியை பற்றி கிசு கிசுத்து வந்தனர். சமீபத்தில் அவர் ரவி தேஜாவுடன் நடித்த கிராக் படம் திரைக்கு வந்து வெற்றிபெற்று ராசியான நடிகை என்று நிரூபித்தார்.
ஸ்ருதிஹாசன் சமீபத்தில் இணையதளம் வழியாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர். நீங்கள் காதலில் இருக்கிறீர்களா? என்று கேட்டார் அதற்கு இருக்கிறேன் என்று சொல்லி ஷாக் அளித்தார். இந்த ஆண்டில் திருமணம் நடக்குமா? என்றதற்கு இல்லை என்றும் பதில் அளித்தார். ஸ்ருதிஹாசன் பாய்பிரண்ட் கோர்சேலை ஏற்கனவே பிரிந்த நிலையில் தற்போது காதலில் இருப்பதாக ஸ்ருதி அளித்த பதில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது. யார் அந்த புது காதலன் என்றும், பழைய பாய்ஃபிரண்ட் ஆண்ட்ரு நிபோந்தான் அந்த காதலரா என்றும் ஸ்ருதியிடம் பலரும் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர்.