கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் எண், ஓடிபி: மோசடி எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பொது மக்களிடம் தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதற்காக ஆதார் எண் மற்றும் ஓடிபியை கேட்டு தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. தொலைபேசி மூலம் அழைப்பவர்கள், தங்களை மருந்து கட்டுப்பாட்டுத் துறையில் இருந்து அழைப்பதாக அறிமுகம் செய்துகொள்வதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு நடவடிக்கை எதுவும் தொடங்கப்படவில்லை என்று பத்திரிகை தகவல் அமைப்பின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தொலைபேசியில் அழைக்கும் மோசடி நபர்கள், கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்வதற்காக தனிப்பட்ட விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, ஆதார் மற்றும் பான் அட்டை எண்கள் ஆகிய விவரங்களை கேட்பதாகக் கூறப்படுகிறது.

முதியவர்களை குறிவைத்து செய்யப்படும் இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் எந்த விவரங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.தடுப்பூசி என்று கூறியதும் உடனடியாக அதை நம்பி தங்கள் விவரங்களை கொடுக்கக்கூடிய நிலை இருப்பதால் மோசடி பேர்வழிகள் சூழ்நிலையை பயன்படுத்தி ஏமாற்ற முயற்சிப்பதால் தடுப்பூசி பதிவு நடவடிக்கை எதுவும் தொடங்கப்படவில்லை என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>