`ஸ்டெர்லைட் நிர்வாகம் என்னிடம் டீல் பேசியது!- பகீர் கிளப்பும் பொன்னார்

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் டீல் பேசியது என்ற பகீர் தகவலை தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தூத்துக்குடி மாவட்ட குமரெட்டியாபுரத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகின்றது. பல அரசியல் கட்சிகளும் பிரபலங்களும், `ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள்’ என்று ஓரணியில் நின்று குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் அமைச்சர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தவன் நான். இன்று ஆலை அமைத்தது தவறு என்று சொல்லும் எந்தக் கட்சியும் அன்று களத்தில் இல்லை. அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் எனக்கு டீல் பேச முயன்றது. நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் சொல்லப் போனால், நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சமயத்திலும் நிதி கொடுப்பதாக தெரிவித்தனர். அப்போதும் மறுத்துவிட்டேன்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

 

More News >>