மாஸ்டரில் விஜய் சேதுபதி சிறுவயது நடிகர் யார் தெரியுமா?
தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கடந்த ஆண்டே இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடி இருந்தது. இதனால் 8 மாத்துக்கும் மேலாக படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கி இருந்தது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளியையொட்டி தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத டிக்கெட்டுதான் தியேட்டருக்குள் அனுமதி என்று உத்தரவிட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. 100 சதவீத டிக்கெட் அனுமதி கிடைத்தால் மட்டுமே தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்வது என்று பட தரப்பு எண்ணி இருந்தது. இதையடுத்து 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர் அதிபர்கள் முதல் வருக்கு கோரிக்கை வைத்தனர். நடிகர் விஜய் நேரில் அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டு கோரிக்கை வைத்தார். அதுபற்றி பரிசீலித்த முதல்வர் 100 சதவீத டிக்கெட்டுக்கு அனுமதி அளித்தார்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது கோர்ட்வரை விவகாரம் சென்றது. இதையடுத்து 100 சதவீத அனுமதியை ரத்து செய்து 50 சதவீத அனுமதி மட்டுமே என்று அரசு மறு உத்ததரவு பிறப்பித்தது. ஆனால் திட்டமிட்டபடி பொங்கல் தினத்துக்கு முதல்நாள் மாஸ்டர் படம் திரைக்கு வந்தது. கூட்டம் வருமா? கொரோனா பிரச்னையால் பாதிப்பு ஏற்படுமே என்ற சந்தேகம் இருந்த நிலையில் மாஸ்டர் படம் பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்தனர். 2வது வாரத்தில் 200 கோடி வசூலை இப்படம் தாண்டி விட்டது. மாஸ்டர் படத்தில் பெரிய ஹைலட்டாக விஜய் சேதுபதி பாத்திரம் அமைந்துவிட்டது. பவானி என்ற வில்லன் வேடம் என்றாலும் வலுவான வேடமாக இருந்தது அதை அவ்வளவு நேர்த்தியாக விஜய் சேதுபதி செய்திருந்தார். விஜய் சேதுபதியின் காட்சி படத்தில் சிறுவயது முதல் காட்டப்படுவதால் சிறுவயது பாத்திரத்தில் நடிக்க மாஸ்டர் மகேந்திரன் தேர்வானார்.
ஆளே அடையாளம் தெரியாதளவுக்கு மீசை மழித்து முரட்டு தோற்றத்துக்கு மாறி நடித்தார். இது அவருக்கு பிள்ஸ் ஆக அமந்தது. யார் அந்த சிறுவயது பாத்திரத்தில் நடித்தவர் என்று பேச வைத்துவிட்டார். மாஸ்டர் படத்தில் தான் நடித்த வேடத்தின் படத்தை பகிர்ந்த மகேந்திரன் படக்குழுவுக்கு நன்றி சொல்லி இருக்கிறார். மகேந்திரனுக்கு 30வது வயது பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து பகிர்ந்தனர். அதற்கு நன்றி தெரிவித்தார். மகேந்திரன் கூறும்போது, வாழ்த்து தெரிவித்த குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி என தெவித்திருப்பதுடன் அதை மாஸ்டர் குழுவுக்கு டேக் செய்து என்னுடைய இந்த பிறந்த நாளை மறக்க முடியாமாலாக்கிய மாஸ்டர் டீமிற்கு நன்றி என குறிப்பிட்டிருக்கிறார்.