என் நெஞ்சோரமா பாடலின் சிறப்பம்சம்.. காதலின் புனிதத்தை உணர்த்தும் தொகுப்பு..
சின்னத்திரையில் சீரியலுக்காக கைக்கோர்த்த ஜோடி ஒன்று இன்று நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துள்ளது. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய திருமணம் சீரியல் மூலம் அறிமுகமானவர்கள் தான் சித்து மற்றும் ஷ்ரேயா. இது இரண்டு பேருக்குமே அமைந்த முதல் வாய்ப்பு ஆகும். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று புதியதொரு உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில் இவர்கள் ஒன்று சேர்ந்து நடித்த பாடல் Behindwoods சேனலில் கடந்த 20 ஆம் தேதி வெளியானது. இப்பாடல் இளவட்டங்களிடையே மிகவும் ரசிக்கப்பட்டு பல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. காதலுக்கு அளிக்கும் சமர்ப்பனமாய் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களது நடிப்பில் உலகத்தில் உலாவி வரும் இரண்டு இதயங்களில் உதயமாகும் உண்மையான காதலை உணர்த்தியுள்ளனர்.
பிரபல பாடலாசிரியரான தமயந்தி இப்பாடலுக்கு ஏற்ற சிறப்புமிக்க வரிகளை எழுதியும் பேர் சொல்லும் விதமாக பாடலை இயக்கியும் உள்ளார். இப்பாடல் 'என் நெஞ்சோரமா' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிஜூ சாம் பாடலுக்கு தக்க இசையை தந்து மேலும் மெழுகு ஏத்தியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இப்பாடலை வடிவமைக்க ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியன் மற்றும் எடிட்டர் தியாகு ஆகிய இருவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜே ஸ்டூடியோஸ் சார்பில் இப்பாடல் தயாரித்து வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.