நடிகரின் நாக்கை அறுப்பவருக்கு ரூ. 1 கோடி பரிசு இந்து மத தலைவர் அறிவிப்பால் பரபரப்பு
இந்தி நடிகர் சயீப் அலிகான். இவர் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் மூலம் தமிழ், தெலுங்கில் நடிக்கவிருக்கிறார். ஆதி புருஷ் ராமயாணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும் நடிக்கின்றனர். இப்படத்தில் ராவணன் எவ்வளவு மனித தன்மையுடன் நடந்துகொண்டான் என்பதை என் கதாபாத்திரம் விளக்கும் என்று சயீப் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு இந்து மதத்தினர் மற்றும் பாஜ கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ராவணன் ஒரு அரக்கன் அவனிடம் மனித தன்மை கிடையாது. அந்த பாத்திரத்தை உயர்த்தி சொல்வதற்காக இப்படி சயீப் அலிகான் கருத்து கூறி உள்ளார். உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். இதையடுத்து சயீப் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். தற்போது தாண்டவ் என்ற வெப் சிரீஸில் நடிக்கிறார் சயீப்.
இதில் இந்து கடவுள்களை பற்றியும் இந்து மத நம்பிக்கைகள் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட சில காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உடனடியாக இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் நடிகர் சயீப் அலிகானை கைது செய்ய வேண்டும் என்று நெட்டிஸன்களும், பாஜகட்சியினரும் சமூக வலை தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பேன் தண்டவ நவ்( BanTandavNow) என்ற ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் இதுபற்றி புகார் அளிக்கப்பட்டு கடவுளை இழிவு படுத்தி பேசிய நடிகர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர். இந்நிலையில் நடிகரின் நாக்கை துண்டிப்பவருக்கு ரூ 1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று இந்து அமைப்பு அறிவித்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகராஷ்டிரா கர்னி சேவா அமைப்பு தலைவர் கூறும்போது. கடவுள்களை இழிவுபடுத்தி பேசிய நடிகர், நடிகையாராக இருந்தாலும் அவர்களின் நாகை அறுப்பவர்களுக்கு 1 கோடி பரிசளிக்கப்படும் என்றார். மேலும் அவர் கூறும்போது, தாண்டவ சீரிஸ் எடுக்கும் குழுவினர் மன்னிப்பு கேட்டிருக்கின்றனர். அது போதாது என்றார். இந்நிலையில் தாண்டவ் சீரியஸை தயாரிக்கு ஜாபர் கூறும்போது, கடவுளை இழிவுபடுத்தும் எண்ணமோ, யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமோ எங்களுக்கு கிடையாது. நாங்கள் இந்த நாட்டின் மீதும் மக்களின் உணர்வுகள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். இந்த வெப் சீரீஸில் தேவையான மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் எங்களுக்கு வழிகாட்டியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.