ஆடைக்கு மேல் கை வைத்து தொந்தரவு செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது: மும்பை நீதிபதி பரபரப்பு கருத்து!
ஆடை மீது கை வைத்து பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ சட்டத்தின் கீழ் வராது எனக்கூறி மும்பை உயர் நீதிமன்றத்தின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களை மீட்கும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம்செய்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது இச்சட்டத்தின் நோக்கம்.
இதற்கிடையே, 39 வயதான ஒரு நபர் ஒருவர், 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவரிடம் பாலியல் வன்கொடுமை ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா, பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் இதனை பாலியல் வன்கொடுமை என்று எடுத்துக்கொள்ள முடியாது. பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அதனை போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும்.
எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடையை அகற்றாமல், தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது. எனவே, அவரை விடுதலை செய்கிறேன். போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியிலான நோக்கத்துடன் குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளை தொடுதல், தாக்குதல் நடத்தல் அல்லது குற்றம்சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளை தொட வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது பாலியல் வன்கொடுமை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவரை அவரின் விருப்பம் இல்லாமல் பாலியல் நோக்கத்துடன் அத்துமீறி தொடுவதை ஆங்கிலத்தில் Groping என்பார்கள். இந்த செயல் பாலியல் குற்றமல்ல" என்று தீர்ப்பளித்து குற்றவாளியை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நீதிபதியின் இந்த கருத்து இந்தியளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.