ஆஸ்திரேலியாவில் ரசிகர் மீது இனவெறி தாக்குதல்.. பாதிக்கபட்டவரை காண விரும்பும் அஸ்வின்!

ஆஸ்திரேலியாவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில், பெளண்டரி லைனில் நின்றிருந்த இந்திய வீரர் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவை, ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனரீதியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய அணி நிர்வாகம், ஆஸ்திரேலியாவிடம் புகார் செய்தது. மறுநாளும் இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்தது. முகமது சிராஜ் நடுவரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட ஆறு பேர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், இந்திய வீரர்களை மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் மீதும் ஆஸிதிரேலியா ரசிகர்கள் இன ரீதியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சிட்னியில் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகள் என்றாலே கிருஷ்ண குமார் தவறாமல் கண்டு மகிழ்வார். இதன்படி, ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான 3-வது டெஸ்ட்டில் போட்டியை சிட்னி மைதானத்தில் கிருஷ்ண குமார் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கேலரியில் இருந்த ஒரு ரசிகர் அவரை, கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். மேலும், இந்திய தேசியக் கொடியை அசைப்பதை நிறுத்து என சத்தம் போட்டு தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

இதன்காரணமாக, அவர், நான்காம் நாள் போட்டியினை பார்க்க மைதானத்துக்கு வரவில்லை. ஆனால், ஐந்தாம் நாள், போட்டியை காண “Rivalry is good, racism is not”, “No racism mate”, “Brown inclusion matters” and “Cricket Australia — more diversity please”– என்ற வாசகங்கள் அடங்கிய ஐந்து பேனர்களுடன் மைதானத்துக்கு வந்துள்ளார். ஆனால், பரிசோதனை அதிகாரிகள், இந்த பேனர்களை எல்லாம் அனுமதிக்க முடியாது. நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல் என அந்த அதிகாரி இறுமாப்புடன் திட்டியுள்ளார்.

பின்னர், கிருஷ்ணகுமார் தனது காருக்குச் சென்று அந்த பேனர்களை வைத்துவிட்டு வந்தபின், மற்றவர்களை விட இவரை அதிக நேரம் சோதித்துள்ளனர். அநாகரிகமாகவும் நடந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, கேலரியில் கிருஷ்ண குமார் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு தன் ஜுனியர் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, நியூ செளத் வேல்ஸ் மாகாண மைதான பொறுப்பாளரிடம், கிருஷ்ண குமார் தன் வக்கீலுடன் சென்று புகார் தெரிவித்துள்ளார். இதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள், விசாரணை முடியும் வரை மேற்கொண்டு இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்க முடியாது என்றனர்.

இந்நிலையில், சிட்னி மைதானத்தில் பாதுகாப்பு அதிகாரியால் இனவெறி தாக்குதலுக்கு உள்ளான இந்திய வம்சாவளி இந்திய ரசிகரைத் தொடர்புகொள்ள இந்திய பந்துவீச்சாளர் அஸ்வின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

More News >>