குடியரசு தினத்தில் தர்மசங்கடத்தில் ஆழ்ந்த நடிகை..

இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை எனக் குறிப்பிடத்தக்கப் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் மாதவனுடன் இணைந்து இவர் நடித்த மாறா படம் ஒடிடி தளத்தில் வெளியாகி ஷ்ரத்தாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இன்று குடியரசு தினம் என்றதும் அவருக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்து விட்டது. தர்மசங்கடமான நிலைக்குத் தன்னை தலைமை ஏற்கச் சொன்னவர்களின் செயல் பற்றி விவரித்தார்.

அவர் கூறியதாவது: ஹோட்டல் ஒன்றில் குடியரசு தினத்தன்று தேசியக் கொடி ஏற்றி விழா கொண்டாடுவதாகவும் நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று அழைத்தார்கள். குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றுவதை நல்லவாய்ப்பாகவும் மரியதைக்குரிய நிகழ்வாகவும் எண்ணி ஒப்புக்கொண்டேன். விழாவில் கலந்து கொண்டு தேசிய கீதம் பாடிய போது உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன். அடுத்து கொடி ஏற்ற அழைப்பார்கள் என்பதால் தயாராக இருந்தேன்.

ஆனால் கொடியை ஓட்டல் பொது மேலாளர் ஏற்றி வைத்தார். அதைக்கண்டு அப்செட் ஆனேன். எனக்குத் தர்ம சங்கடமாகவும், இக்கட்டாகவும் கருதினேன். பிறகு ஹோட்டல் செக்யூரிட்டிகள் 2 பேர் யூனிபார்மில் வந்து பொது மேலாளருக்கு வணக்கம் செலுத்தினார்கள். பிறகு வரும்போது எனக்கு வணக்கம் சொன்னார்கள். பொது நிகழ்வில் இதை மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தேன். இது மிகவும் மோசமாக அமந்துவிட்டது. நான் பதற்றமாக உணர்ந்தேன் என்றார். கடைசியில் ஷ்ரத்தாவுக்கு லட்டு வழங்கி அவரை சாந்தப்படுத்தியது ஓட்டல் நிர்வாகம். கையில் லட்டுடன் அவர் படம் வெளியிட்டார்.முன்னதாக நேற்று திருமணப் பந்தத்தில் இணைந்த இந்தி நடிகர் வருண் தவான் - நடாஷா தலால் பற்றி ஒரு கமெண்ட் பகிர்ந்தார்.

அதில் வருண் பற்றிக் கிண்டலும் கேலியும் தெறித்தது. அவர் கூறியிருந்ததாவது: திருமண ஜோடி சந்தோஷத்தைப் பரப்பியது. சோகம் என்னவென்றால் வருணை இனி திரையில் பார்க்க முடியுமா என்பது தான். மனைவியும், மச்சனிகளுக்கும் வருண் சக ஹீரோயினுடன் இணைந்து நடிப்பதை ஏற்க மாட்டார்கள். ஒருவேளை அவர் இனி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க மாறிவிடலாம். நடிப்பையும், நிஜவாழ்க்கையையும் எப்படி அவர் சமநிலை செய்யப்போகிறார்? எப்படியோ அவரை மிஸ் செய்கிறோம். வருணுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்திருந்தார்.

More News >>