செல்போனில் ஆபாசம்: பெற்றோர் கவனிக்க! விவேக் வேண்டுகோள்

காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிபா  சிறைவைக்கப்பட்டு கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தில் இளம்பெண்  கற்பழிக்கப்பட்ட சம்பவமும், நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த பாலியல் சம்பவங்கள் குறித்து அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  வன்கொடுமை தடுப்பச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

பொதுமக்களுக்கும் பெற்றோருக்கும் பாலியல் வன்கொடுமை தவிர்ப்பதற்கு ஒரு சிறிய யோசனை ஒன்றை நடிகர் விவேக் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், 

"குழந்தை பலாத்காரம் தொடர்கதையா? பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு அது நன்றன்று. உடனே மரண தண்டனை வழங்கப்பட்டால் தான் குற்றம் புரிவோருக்கு பயம் வரும். இணையத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாச வீடியோக்கள், அதை எளிதில் பார்க்க உதவும் செல்போன்கள் இவையும் இக்குற்றங்களுக்கு காரணம். பெற்றோர் கவனிக்க!'.. என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>