768 படிக்கட்டு கொண்ட கட்டடத்தை சைக்கிள் மூலம் அரை மணி நேரத்தில் ஏறிய பிரான்ஸ் பைக்கர்!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைப்பாதை பைக்கர் ஒருவர் வித்தியாசமான முறையில் சாதனை நிகழ்த்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலைப்பாதை பைக்கர் ஆரேலியன் போடெனாய் என்பவர், பிரான்ஸில் புதிதாக கட்டப்பட்ட டிரினிட்டி டவர் கட்டடத்தின் உச்சியை தனது சைக்கிள் மூலம் அரை மணி நேரத்தில் ஏறியுள்ளார். இதில், ஹைலைட் என்னவென்றால், கட்டிடத்தினுள் இருக்கும் 768 படிக்கட்டுகளை கடந்து உச்சிக்கு அரை மணி நேரத்தில் சென்ற ஆரேலியன் ஒரு முறை கூட காலை கீழே ஊன்ற வில்லை என்பதுதான். இவரது சாதனையை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இந்த சாதனை குறித்து ஆரேலியன் கூறுகையில், இது உண்மையிலே மிக உயரமானது. உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் கடுமையாக இருந்தது. எனது தோள்கள், கால்கள் என உடலின் பல பாகங்களில் கடும் வலி ஏற்பட்டது.

நான் உள்ளே இருக்கும் போது இது ஒரு போதும் முடியாது என்று நினைத்துக்கொண்டு மாடிகளை ஏறினேன். இது கட்டடத்தின் இறுதிப்படிகள் உலோகப் படிக்கட்டுகளாவும், செங்குத்தாகவும், வழுவழுப்பு நிறைந்ததாகவும் இருந்தன என்றும் தெரிவித்தார்.

More News >>