லாக் டவுனால் அதிகரித்ததா குழந்தை திருமணம்.. ஆய்வு என்ன சொல்கிறது.. ஓர் அலசல்!
கொரோனா தொற்று காலத்தில் மேலும் 5 லட்சம் குழந்தை திருமணம் நடக்கவிருப்பதாக சேவ் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகின் முக்கிய தொண்டு நிறுவனமாக கருதப்படும் சேவ் தி சில்ட்ரன் வெளியிட்ட அறிக்கையில், பெருந்தொற்று காரணமாக, 2025 ஆண்டில் மேலும் 2.5 லட்சம் குழந்தை திருமணம் நடக்கவிருப்பதாக எச்சரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு சராசரியாக நடைபெறும் 58.4 மில்லியன் குழந்தைகள் திருமணத்துடன் சேர்த்துகொண்டால், 2025-ம் ஆண்டு 61 மில்லியன் குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல குடும்பங்கள் வறுமை காரணமாகவும், நிதிச்சுமை காரணமாகவும் பல பெற்றோர்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக குறைய தொடங்கியுள்ள குழந்தை திருமண விகிதத்தை இது பாழாக்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் இந்தியாவில் அதிகம் நடைபெறும் மாநிலமாக ராஜஸ்தான் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து குழந்தைகள் நல அமைப்பான Cry- ஆய்வு மற்றும் செயல்பாடு, கொள்கை இயக்குனர் பிரித்தி மஹரா கூறுகையில், பற்றாக்குறை காலத்தில், பசியாற ஒரு வயிறு குறைகிறது எனும் அடிப்படையில், குழந்தை திருமணம் நியாயப்படுத்தப்படுகிறது. எப்படியும் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும், அதை இப்போதே செய்தால் என்ன என காரணம் சொல்லப்படுகிறது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைகிடமாகவுள்ளதால், குழந்தை திருமணம் செய்து கொடுக்க குடும்பங்கள் தீர்மானிக்கின்றன.பாலியல் துன்புறுத்தல் மற்றும் சிறுவயது தாய்மையை தவிர்க்க எடுக்கும் முடிவென்றாலும் அதே பாதிப்புகளை இதுவும் உண்டாக்கும் என்றார்.
இந்தியாவில் குழந்தை திருமணங்களை சட்டரீதியாக ரத்து செய்வதற்கு முதல் நாடப்படுபவராக சாரதி டிரஸ்ட்டின் நிறுவனர் அறங்காவலரான கீரித்து பாரதி திகழ்கிறார். குழந்தை திருமணம் குறித்து கீரித்து பாரதி கூறுகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 18 ஆண்டுகளுக்கு முன் இரண்டு வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட நிம்புவின் திருமணம், தனது முயற்சியால் ரத்தானது. சிறுமிகள் குழந்தை திருமணம் செய்து கொடுக்கப்பட்டாலும், அவர்களை அனுப்பி வைக்கும் சடங்கு, வயதுக்கு வந்தவுடன் நிகழ்கிறது.
இந்த நிலை கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. சமூக இடைவெளி காரணமாக குறைவான விருந்தினர்கள் அழைக்கப்பட்டு செலவு குறைவது மற்றும் வெளி நபர்கள் உதவிக்கு வர வாய்ப்பில்லாதது இதற்கான காரணங்களாகின்றன. மற்ற நேரங்களில், இதனை தடுக்க ஆசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் காவல்துறையை நாடுவார்கள், ஆனால், இப்போது எல்லாம் வீட்டுக்குள் நடப்பதாலும், காவல் துறை தொற்று தடுப்பு பணிகளில் தீவிரமாக இருப்பதாலும், அவர்களால் உதவிக்கு வர முடியவதில்லை. பெண் வயது தடையில்லை பெண்கள் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குழு அமைத்திருப்பது குழந்தைகள் திருமணத்தை குறைக்குமா என்ற கேள்விக்கு பதலளித்த கீரித்து பாரதி 18 வயது வரை காத்திருக்க மாட்டார்கள் எனும் போது, 21 வயது வரையா காத்திருக்கப்போகிறார்கள் என்று தெரிவித்தார்.
குழந்தைகள் திருமணப் பிரச்சனை ஆங்கிலேயர் காலம் முதல் இருக்கிறது. குழந்தைகள் திருமண கட்டுப்பாடு சட்டம் 1929ல் கொண்டு வரப்பட்டது. குழந்தைகள் திருமணத்தை ஒரு குற்றமாகக் கருதி தண்டனையை தீவிரமாக்க வேண்டும் என்கிறார். அனைத்து குழந்தை திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு புதிய குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் தான் இந்தியா குழந்தை திருமணங்கள் இல்லாத நாடாகும் என்றும் கூறினார்.