அரசியல்வாதியாக மாறும் வரலட்சுமி..

விஜயின்  62-வது படம் பெயர் வைக்கப்படாத படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். விவசாயமும், அரசியலும் கலந்த கதையாக இது உருவாகிறது என்ற தகவல்கள் வலம் வருகிறது.

விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமாரும்  நடிக்கிறார்கள். ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக வருவதாகவும்  இவர்களுடன் விஜய் மோதுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. வரலட்சுமியும் இதில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

வரலட்சுமியின் கதாபாத்திரம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, வரலட்சுமியும் அரசியல்வாதியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வரலட்சுமிக்கும் படத்தில் எதிர்முனையில் மோதும் அரசியல்வாதி வேடம். இந்த கதாபாத்திரத்தின் மூலம்தான் கதையில் அதிரடியான திருப்பங்கள் வருகின்றன. எனவே, வரலட்சுமி கதாபாத்திரம் கதையில் மிகவும் முக்கியமானது என்று தகவல்கள் கசிந்துள்ளது. 

ஏற்கனவே  தனுஷ் நடித்த ‘கொடி’ படத்தில் திரிஷா அரசியல்வாதியாக நடித்து பலரது கவனத்தையும் பெற்றார். த்ரிஷாவின் கதாபாத்திரமும் வில்லத்தனமான வேடத்தில் சித்தரிக்கப்பட்டு இருந்தது. தற்போது வரலட்சுமியும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி என்று திரைத்துறையினர் கிசுகிசுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>