கோவில் யானை ராஜேஸ்வரி கருணைக் கொலை: உயர்நீதிமன்றம் அனுமதி
சேலத்தில் உள்ள சுகவனேஷ்வரர் கோவிலில் நோய்வாய்பட்டு கிடக்கும் யானை ராஜேஸ்வரி யானையை கருணைக் கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற கோவில் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக யானை ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் எழுந்து நடக்கக்கூட முடியாமல் நோய்வாய்பட்டது. படுத்த படுக்கையாக ஆன ராஜேஸ்வரிக்கு சிகிச்சைகள் அளித்தும் குணப்படுத்த முடியவில்லை. இதனால், யானையை கருணைக் கொலை செய்வதற்காக அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, யானையை கருணைக் கொலை செய்ய முடியுமா என்பது குறித்து பதிலளிக்கும்படி இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து. இந்த வழக்கு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை (இன்று) நடைபெறும் என தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது, யானை ராஜேஸ்வரியை கருணை கொலை செய்ய நீதிபகைள் அனுமதி அளித்தனர். யானையை பரிசோதித்து 48 மணி நேரத்திற்குள் அறிக்கை அளிக்கும்படி சேலம் கால்நடை மருத்துவர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், யானையைக் கருணை கொலை செய்வதற்கு முன்பு மருத்துவ அறிக்கை பெற்றபின் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com