பிரியங்காவை கவலை கொள்ள வைத்த கருப்பு நிறம்..
நடிகர், நடிகைகள் என்றால் அழகாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்ற காலகட்டம் இருந்தது. அந்த நடிகர் எவ்ளோ சிவப்பு தெரியுமா? அந்த நடிகை எவ்ளோ சிவப்பு தெரியுமா என்றும் ரசிகர்களுக்குள் விவாதங்களும் நடக்கும். இதெல்லாமே 90 களோடு முடிந்துவிட்டது என்று சொல்லலாம்.வசீகரமாக இருக்க வேண்டும் என்பதில்லை. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆகலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் ரஜினிகாந்த் அவரது வருகைக்குப் பிறகு திரையுலகில் திருப்பு முனையும், திறமைகளுக்கு மரியாதையும் அதிகரித்தது. கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை சென்று சாதித்தார் ரஜினி காந்த்.
ஹீரோயின்களில் பலர் நிறம் குறைந்திருந்தாலும் திறமை அவர்களையும் முன்னணி நடிகைகளாக்கி இருக்கிறது. நயன்தாரா, தமன்னாவைவிட கலர் குறைவுதான் ஆனால் மார்க்கெட் விகிதத்தில் நயன்தாரா முன்னணியில் இருக்கிறார். தமன்னாவையும் நிறத்தை வைத்து மதிக்கப்பட வில்லை. அவரிடம் கேட்டால் நிறம் என்னங்க நிறம் அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறார். தமன்னாவின் நடனம், நடிப்பு, தொழில் மீதான் ஈடுபாடுதான் அவரையும் உயர்த்திப்பிடிக்கிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவரும் சற்று நிறம் குறைவுதான். இன்று ஹாலிவுட்டில் சாதித்துக்கொண்டிருக்கிறார். தனது தோல் நிறம் குறைவாக இருப்பதுபற்றி அவர் சிறு வயதில் கவலைப்பட்டிருக்கிறார். ஆனால் இப்போது என்ன நினைக்கிறார். இதோ அவரே அதுபற்றி சொல்கிறார்.ஒரு காலகட்டம் இருந்தது. நான் இன்னமும் சிறுவயதாக இருந்தபோது உறவினர்கள் என்னை கலர் கம்மியாக கறுப்பாக இருக்கிறேன் என்று கிண்டல் செய்வார்கள். அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் நடிப்பதற்கு முன் அழகு கிரீம், பவுடர் அணிந்து கொள்வேன். ஆனால் காலம் செல்லச் செல்ல என் நிறத்தின் மீது எனக்கு நம்பிக்கை பிறந்தது. அதன்பிறகு அழகு கிரீம்கள் விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டேன் என்றார்.பிரியாங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதுடன், நெட்பிளிக்ஸின் ஒயிட் டைகர் என்ற படத்திலும் நடிக்கிறார்.