தண்ணீர் இப்போது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

நேரச் சக்கரத்தில் சிக்கி வொர்க் டென்ஷன், பிஸி என கோடை காலம் தொடங்கியாச்சு என்பதையே மறந்திருப்போம். சித்திரை வெயிலிலிருந்து தப்பிக்க உதவக்கூடிய முதல் ஆயுதம் தண்ணீர். இந்த ஆயுதத்தை சரியா பயன்படுத்த சில டிப்ஸ்:

கணக்குப்பண்ணுங்க!

தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம்ன்னு ஒரு வாரம் தொடர்ச்சியா கணக்குப் பண்ணுங்க. அடுத்து வாரம் ஒரு முறை இந்த அளவீடை அதிகப்படுத்தலாம்.

கையோடு வச்சுக்கணும்!

தண்ணீர் பாட்டில் எப்போதும் கையோடு இருக்குமாறே பார்த்துக்கோங்க. இந்தப் பழக்கம் அடிக்கடி தண்ணீர் எடுத்துக் குடிக்க நியாபகப்படுத்தும்.

அளவை ஏத்தணும்..!

இன்னைக்கு ஒரு சின்ன டம்ளரில் தண்ணி குடிப்பிங்க. நாளைக்கு இந்த டம்ளர் அளவை அதிகப்படுத்துங்களேன்..! உங்களையும் அறியாம கொஞ்சம் எக்ஸ்ட்ரா தண்ணீர் அன்றைய நாளுக்கான எக்ஸ்ட்ரா எனர்ஜியா இருக்கும்.

தண்ணீர சாப்பிடவும் செய்யலாம்!

நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிடுறது மூலமா கூடுதல் நீர்ச்சத்து நம்ம உடலுக்குக் கிடைக்கும். தர்பூசணி, வெள்ளரி, தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள் என சத்தாணதை சாப்பிடலாம்.

இது உங்கள் சாய்ஸ்..!

வெறும் தண்ணீர எப்படி குடிச்சுட்டே இருக்க முடியும்ன்னு சலிப்பு வேணாம். தண்ணீருல கொஞ்சம் எலுமிச்சை உப்பையும் சேர்த்து ஒரு ஜூஸா குடிங்க. இல்ல, வெள்ளரித்துண்டு ரெண்டு மூணு சேர்த்து கூட ஸ்பெஷல் மாக்டெய்ல் கூட தயாரிச்சு அசத்தலாம்.

More News >>