யாஷிகாவுக்கும் பாலாஜிக்கும் என்ன உறவு?? முதல் முதலாக அவரே வெளியிட்ட செய்தி..!
நண்பர்களாய் இருந்தாலும் இப்படி ஒரு ஒற்றுமையா?? யாஷிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய படம் கவலை வேண்டாம். அதன் பிறகு தனக்கு கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் தட்டி கழிக்காமல் சினிமாவில் மேலும் வளர ஏணியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். அப்படி கிடைக்கபெற்றது தான் பிக் பாஸ் வாய்ப்பு. தனது தனித்தன்மையை பயன்படுத்தி சக போட்டியார்களுடன் தாக்குப்பிடித்து முதல் 10 போட்டியாளர்கள் வரிசைகளில் இடம்பெற்றார்.
கடைசியில் தனக்கு கிடைத்த தொகையே போதுமானது என்று 5 லட்சத்தை பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டாட்டா காட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். வெளியே சென்ற யாஷிகாவுக்கு ஒரு சில படங்களே கைவசத்தில் இருந்தது. இருப்பினும் பல கவர்ச்சி நிறைந்த போட்டோஷூட்டில் நடித்து தனது ரசிகர்களை குஷியில் வைத்திருந்தார். பிக் பாஸ் பிறகு கைவிட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பாலாஜி மற்றும் யாஷிகா ஒன்றாக இருக்கும் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.
இது குறித்து இரண்டு பேரின் ரசிகர்கள் கூட்டம் உங்களுக்குள் என்ன உறவு என்ற கேள்விகள் வெளிப்படையாக எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு யாஷிகாவும் தைரியமாக பதில் அளித்துள்ளார். அதாவது இரண்டு பேருக்கும் இடையே தூய்மையான நட்பு உறவு மட்டுமே உள்ளது. அது மட்டும் இல்லாமல் நான் எனது நண்பனான பாலாஜிக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவன் இந்த இடத்திற்கு வருவதற்கு அதிக அளவு உழைத்துள்ளான் என்று யாஷிகா கூறியுள்ளார்.