சமந்தா ஜிம்மிற்கு செல்லும் ரகசியம்... அவரே சொன்ன பதில்..

நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார்.சமீபத்தில் சமந்தா சமீபத்தில் சமூக ஊடகம் வழியாக ரசிகர்களுடன் உரையாடினார். சைவ உணவு உண்பீர்களா? என்று அவரிடம் கேட்ட போது,நான் சைவ உணவு உண்பவர் அல்ல என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் அவர் சில கேள்விக்குப் பதில் அளித்தபோது சினிமாவில் ​இதுவரை எனக்கு பிடித்த பாத்திரம் நந்தினி ரெட்டி இயக்கிய ஓ! பேபி. படத்தில் நடித்த பாத்திரம் உங்கள் கணவர் நாக சைதன்யா ஏன் இவ்வளவு சமூக விரோதமானவராக இருக்கிறாரே என்று கேட்க, எதற்காக இப்படிக் கேட்கிறீர் கள் என்பது தெரியாது. இதுபற்றி அவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார்.கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கிய யே மாயா சேசாவ் தெலுங்கு படப் படப்பிடிப்பில் சைதன்யாவும் மற்றும் சமந்தாவும் நடித்தபோது நிஜ காதல் ஜோடியானார்கள்.

சமந்தா தற்போது தனது உடற்கட்டை ஜிம்மிற்கு சென்று கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். அவரிடம் உங்களுக்கு உடற் தகுதிக்குக் காரணம் நீங்கள் தவறாமல் ஜிம் பயிற்சி செய்வது என்று தெரிகிறது. அந்த பழக்கம் எப்படி உங்களுக்கு வந்தது என்று ஒரு ரசிகர் கேட்டபோது, ​​“நான் உங்களுக்கு ஒரு பெரிய ரகசியத்தைச் சொல்கிறேன். நான் ஏன் ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? சைதன்யாவை பார்க்கத்தான் செல்வேன், அவர் குறிப்பிட்ட ஜிம்மில் வந்து பயிற்சி செய்ததால் நான் அந்த ஜிம்மிற்கு சென்றேன். அதுவே எனக்கு ஜிம்மிற்கு செல்லும் பழக்கத் தை ஏற்படுத்திவிட்டது என்றார்.கடைசியாக சமந்தா ஓ பேபி மற்றும் ஜானி படங்களில் நடித்திருந்தார். அடுத்து சகுந்தலம் படத்தில் குணசேகர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார். ஃபேமலி மேன் என்ற ஒடிடி வெப் சீரிஸிலும் நடிக்கிறார். அது விரைவில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.“உங்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது என்று ஒரு ரசிகர் கேட்டதும், என்னை நினைவில் கொள்ளத்தேவையில்லை. நிகழ்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். இந்த தருணம், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா இல்லையா, அவ்வளவுதான் நான் கவலைப்படுகிறேன். நினைவில் இருப்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை என்றார்.

More News >>