4 ஆண்டுகள் படமாகப் போகும் சரித்திர படம்.. ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ஹீரோக்கள்
இயக்குனர் ஷங்கர் படமென்றால் கண்முன் நிற்பது அவரது பிரமாண்டம் தான். ஜீன்ஸ், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 என அவரது எல்லா படங்களும் பேசப்பட்டதற்கு காரணம் அப்படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எனலாம். அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் இயக்கிறார். இப்படமும் பல கோடி செலவில் உருவாகிறது. பட்ஜெட் விஷயத்தில் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஷங்கருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அப்படம் சில மாத ஷுட்டிங் முடிந்த நிலையில் அப்படியே நிற்கிறது.
இதுதொடர்பாக பட நிறுவனத்துக்கு ஏற்கனவே எழுதி கடிதத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்கை மேலும் தாமதப்படுத்தினால் நான் வேறுபடம் இயக்க செல்ல வேண்டி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு, ஷங்கர் கே ஜி எஃப் ஹீரோ யஷுக்கு ஒரு ஸ்கிரிப்ட் விவரித்ததாகச் செய்திகள் வந்தன, அது யஷுக்கு பிடிக்கவே நடிக்கச் சம்மதம் சொல்லி இருக்கிறார். தற்போது இப்படம் உறுதியாகி உள்ளதாகத் தெரிகிறது. மேலும் வரும் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளது. இதுவொரு சரித்திர படமாக உருவாகவிருப்பதுடன் மல்டி ஸ்டார் படமாகவும் இருக்கும்.
எனவே இதில் மேலும் சில முன்னணி ஹீரோக்கள் நடிக்க உள்ளனர்.சமீபத்திய தகவல்களின்படி, இப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்கள் நடக்கும் எனப்படுகிறது. ஏனெனில் இதில் நிறையக் காட்சிகள் கிரீன் மேட் பயன்படுத்தி படமாக்கப்படும், மேலும் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பமும் தேவைப்படுகின்றன.ஒரு வரலாற்றுப் படமான இது 2022 ஆம் ஆண்டில் ஷூட்டிங் தொடங்கிச் சென்று 2027 இல் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படும் இந்த படம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வேலை செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.ராம் சரண், விஜய் சேதுபதி மற்றும் தெற்கில் உள்ள பிற பிரபல நட்சத்திரங்களுடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படமாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஷங்கர் கிட்டத்தட்ட 60 சதவீதத்தை முடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பில் ஒரு ஆபத்தான விபத்து நிகழ்ந்தது. 1996 இல் வெளியான இந்தியன் படத்தின் 2ம் பாகமாக இது உருவாகிறது.அரசியல் த்ரில்லராக உருவாகும் இதில் சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், யஷ் தற்போது கேஜிஎஃப்: அத்தியாயம் 2 வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். படத்தின் டீஸர் யஷின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது, இது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். கே ஜி எஃப் அத்தியாயம் 2ல் யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராக்கி வேடத்தில் யஷ் நடிக்கும் போது, சஞ்சய் தத் அதீராவாக பயங்கர வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.