இரண்டு நடிகைகளை வசைமாரி பொழிந்த ரசிகர்கள்.. குடியரசு தினம்கூட தெரியாதா?
பெரும்பாலான நடிகைகள் சமூக வலைதளத்தில் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதுடன் கவர்ச்சி படங்கள் வெளியிட்டு குஷிபடுத்துகின்றனர். சில நடிகைகள் ஏடா கூடமாகக் கருத்துக்கள் சொல்லிச் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் நெட்டிஸன்களிடம் திட்டும் வாங்கிக் கட்டிக்கொள்கின்றனர். ஆனால் இரண்டு நடிகைகள் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லித் திட்டு வாங்கி இருக்கின்றனர். குடியரசு தினத்தன்று நடிகை டாப்ஸி தனது இணைய தள பக்கத்தில் சென்ற 26ம் தேதி கொண்டாடியது 72வது குடியரசு தினம் என்பதற்குப் பதிலாக 71வது குடியரசு தினம் என்று குறிப்பிட்டு வாழ்த்து பகிர்ந்தார்.
அவர் கூறும் போது,71வது குடியரசு தினத்தன்று வாழ்த்துக்களைப் பகிர்வதுடன் நமது குடியரசு தினத்தை எப்படி பெருமையாகக் கொண்டாடுகிறோமோ அதுபோல் நமது அரசியலமைப்பு சட்டத்தையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அது நமது தேசபக்தியை மேலும் புரிந்துகொள்ள உண்மையில் உதவியாக இருக்கும். ஜெய் ஹிந்த் என்றார். ரசிகர்களுக்கு அட்வைஸும் வாழ்த்தும் சொன்ன டாப்ஸி 72வது குடியரசு தினத்தை 71வது குடியரசு தினம் என்று குறிப்பிட்டதை நெட்டிஸன்கள் கிண்டல் செய்தனர்.
அதைக் கவனித்த டாப்ஸி உடனடியாக தனது மெசேஜை திருத்தம் செய்தார். ஆனாலும் முதலில் 71வது குடியரசு தினம் என்று அவர் பதிவிட்டதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அதைப்போட்டு வசை மாரி பொழிகின்றனர்.அதேபோல் நடிகை சில்பா ஷெட்டி குடியரசு தினம் என்பதற்குப் பதிலாகத் தனது வாழ்த்து செய்தியில் சுதந்திர தினம் என்று குறிப்பிட்டு வாழ்த்துக் கூறினார். அதையும் நெட்டிஸன்கள் குறிப்பிட்டு சுதந்திர தினம், குடியரசு தினம் இரண்டுக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா என கேட்டு அவரை நக்கலடித்தனர்.