விவசாயிகள் போராட்டத்தை விமர்சித்த நடிகை.. தீவிரவாதிகள், சமூக விரோதிகள்..
நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சர்ச்சை கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறார்.இந்தி நடிகர் சுஷாந்த் வழக்கு தொடர்பாகப் பாலிவுட் வாரிசு நடிகர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது புகார் கூறினார். இதையடுத்து மகாராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேவை நேரடியாகத் தாக்கி பேசினார். பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்போல் மும்பை உள்ளது என்றார். இதனால் சிவசேனா கட்சி தொண்டர்கள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
பிறகு முஸ்லீம்களுக்கு எதிராக மத உணர்வைத் தூண்டி கலவரம் விளைவிப்பதுபோல் கங்கனா மெசேஜ் வெளியிடுவதாக கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை.கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி சாண்டல் ஏப்ரல் மாதம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து ட்விட்டரில் ஆட்சேபகரமான செய்தியை வெளியிட்டதாகவும் புகார் எழுந்தது.
பின்னர் கோர்ட் இறுதி கெடு விதித்ததையடுத்து அவர் போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.இந்நிலையில் இந்தி படப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அந்தேரி கோர்ட்டில் நடிகை கங்கனா மீதுமான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். தன்னைப்பற்றி அவதூறாகப் பேசியதாக அவர் தாக்கல் செய்த கிரிமனல் வழக்கில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர்.இந்த சம்மன் குறித்து கங்கனா ட்விட்டரில் வெளியிட்ட மெசெஜில், “எனக்கு இன்னும் ஒரு சம்மன் அழைப்பு. அனைத்து ஓநாய்ளும் ஒன்றாக வாருங்கள்… என்னை சிறையில் அடைக்க… என்னைச் சித்திரவதை செய்து 500 வழக்குகளுடன் என்னைச் சுவருக்குள் தள்ளுங்கள் எனக் குறிப்பிட்டார். இவ்வளவு சர்ச்சைக்கிடையிலும் அவர் அவதூறு பேச்சு தொடர்ந்த வண்ணமிருக்கிறது.குடியரசு தினத்தன்று டெல்லியில் நடத்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது போலீஸார் தாக்குதல் நடத்தினர். கலவரம் மூண்டது.
இதுகுறித்து மத்திய அரசு மீதும் புகார் கூறிய எதிர்கட்சியினர் போலீஸார் தாக்குதல் நடத்தியதற்குக் கண்டனம் தெரிவித்தனர்.இந்த போராட்டம் குறித்து கங்கனா கடுமையான விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறும்போது,விவசாயிகள் போராட்டகாரர்களை ஆதரிப்பார்கள் தீவிரவாதிகள். இந்த போராட்டம் மூலமாக நம் நாடு உலக நாடுகளின் சிரிப்புக்குள்ளாகி இருக்கிறது. விவா சாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள். அவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார்.கங்கனா ரனாவத் தற்போது ஜெயலலிதா வாழ்க்கையாக உருவாகும் தலைவி படத்தில் நடிக்கிறார்.