பல இரவுகள் தூக்கத்தை தொலைத்தேன்.. பிரபல நடிகை குற்றச்சாட்டு..
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகினார். அதன் பிறகு தெறி, மெர்சல், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் உச்சத்தை தொட்ட திரைப்படம் என்றால் அது சூப்பர் டீலக்ஸ் தான். இதில் புதியதொரு கதாபாத்திரத்தில் நடித்து பல உள்ளங்களை கவர்ந்தார். பிறகு நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவருக்கு சினிமாவில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஓடிடி தளத்தில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி தற்பொழுது மிக ட்ரெண்டிங்கில் உள்ளது. லாக் டவுனில் இவர் சமையல், ஆடை வடிவமைத்தல் என்று அவரை மிகவும் பிஸியாக வைத்து கொண்டார். இவர் திருமணம் ஆன பிறகும் கவர்ச்சியாக ஆடை அணிந்து போஸ் கொடுக்கிறார், சமந்தா கர்ப்பம் என்று ஏராளமான புரளிகளை கிளப்பி விடவே சமூக வலைத்தளங்களில் ஒரு குரூப் தீயாய் வேலை செய்து வருகின்றது.
இந்நிலையில் சமந்தா இன்ஸ்டாவில் தனது ரசிகர்களுடன் கலந்து உரையாடினார். அப்பொழுது ஒரு ரசிகர் நீங்கள் எப்படி ட்ரோல்களை சமாளிக்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு சமந்தா ஓப்பனாக உண்மையான பதிலை கொடுத்து இருந்தார். அவர் கூறியதாவது:- முதலில் என்னை பற்றி வெளியாகும் ட்ரோல்களை கண்டு நான் மிகவும் மனம் உடைந்து பல இரவுகளை தூக்கத்தை கூட தொலைத்துள்ளேன். ஆனால் இப்பொழுது ட்ரோல்களை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு மறைமுகமாக சாட்டை அடி கொடுத்திருந்தார்.