மார்க் vs பைடன்... திடீர் மோதல் ஏன்?... ஓர் அலசல்!
கடந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க் முடிவு செய்திருந்தார். பயணத்தின்போது, அமெரிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வேலை செய்கிறார்கள், எதிர்காலத்தைக் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மக்களிடம் நிறைய பேச விரும்பினேன் என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மார்க் கூறியிருந்தார்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் பொதுமக்களுடன் பேச வேண்டும் என்பது மார்க்கின் இலக்காக இருந்தது. நடைபெற்ற 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுடன் தொடர்புபடுத்தி சிலர் பேசினர். ஆனால், இதனை தொடர்ந்து மார்க் மறுத்தார். மார்க்கிடம் பணம், அதிகாரம் என எல்லாமே இருப்பதால், அவரை அமெரிக்க அதிபர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஊடகங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. அமெரிக்க அதிபராக பதவியேற்ற மார்க் விரும்பியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று கடந்த 20-ம் தேதி அமெரிக்காவில் 46-வது அதிபராக பதவியேற்றார். இதற்கிடையே, அமெரிக்கன் எகனாமிக் லிபர்ட்டீஸ் திட்டத்தின் இயக்குநரும் பைடனின் பதவி மாற்ற ஏற்பாடுகளை கவனிக்கும் குழு உறுப்பினருமான சாரா மில்லர் கூறுகையில், பல்வேறு கூட்டங்கள் மற்றும் பார்ட்டிகளில் மார்க் ஒரு வரவேற்கத்தக்க விருந்தினராக இனி இருக்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
தொழில்நுட்ப முற்றொருமை நிறுவனங்களுக்கு மத்தியில், ஃபேஸ்புக் ஒரு முக்கிய வில்லனாகத் தான் பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும், சிலிகான் வேலிக்கும் ஒபாமா நிர்வாகம் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பைடன் கூட அவர்களுக்கு நண்பர்களாக கருதப்பட்டிருக்கலாம், ஆனால் இப்போது இல்லை என்றார். உண்மையில், இணையத்தின் தீமைகளுக்கான ஒரு சொல்லாகத் தான் ஃபேஸ்புக்கை அதிபர் பைடன் பயன்படுத்தினார் என்றும் கூறினார்.
2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்தவைகளுக்கு ஃபேஸ்புக் தான் காரணம் என ஜனநாயகக் கட்சியினர் குற்றஞ்சாட்டினர். குடியரசுக் கட்சியினர் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தைப் பயன்படுத்தி வாக்காளர்களை இலக்கு வைத்து பிரசாரம் செய்தது, டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. இதனால், தான் ஜனநாயகக் கட்சி மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இடையிலான உறவு தற்போது இன்னும் மோசமாக இருக்கிறது.
ஃபேஸ்புக்கை டிரம்ப் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். ஃபேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 பதிவுகளில், டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரும் பலமுறை இடம் பிடித்தனர். தற்போது டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வார காலத்துக்கு முன் கணக்கை முடக்கியவர்கள், டிரம்ப் ஒரு வருடத்துக்கு முன் பதவியில் இருக்கும் போது இப்படி கணக்குகளை ரத்து செய்திருப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் அதிபர் ஜோ பைடன் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு என்ன செய்வதாக இருந்தாலும், ஃபேஸ்புக் நிறுவன சாம்ராஜ்யம் மற்றும் மார்க் சக்கர்பெர்க்குக்கு எதிரான வெறுப்புணர்வைச் சுற்றியே இருக்கும் என்றும் கருதப்படுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களில் போட்டியை மீண்டும் கொண்டு வர, பிரத்யேகமாக ஒரு புதிய ஆன்டி டிரஸ்ட் சார் கொள்கையை ஜோ பைடன் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.