52 ஆண்டு கால பாரம்பரியம் முடிவு!.. நாடாளுமன்றத்தில் கால்பதிக்கும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம்
நாடாளுமன்றத்திற்கு 52 ஆண்டு காலமாக வழங்கி வந்த ரயில் உணவு சேவையை வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழக நடத்தவுள்ளது. கடந்த 1968-ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்திற்கான உணவு தேவையை வடக்கு ரயில்வே பூர்த்தி செய்து வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைத்தது. அதன்படி, நாடாளுமன்ற மாளிகை வீடு, நாடாளுமன்ற இணைப்பு வீடு, நாடாளுமன்ற நூலக கட்டிடங்களில் உள்ள கேன்டின் சேவைகளை சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில், 2020-21- ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் முதல் கூட்டதொடர் நாளை தொடங்குகிறது. பிப்ரவரி 15-ம் தேதி வரை முதல் கூட்டத்தொடர் நடக்கிறது. வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அன்றைய தினம் முதல் தனது உணவு சேவையை இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் தொடங்கவுள்ளது. இதற்காக 5 ஸ்டார் தனியார் ஹோட்டலில் கை தேர்ந்த உணவு தயாரிக்கும் நிபுணர்களை கொண்டு, உணவை தயார் செய்து வழங்க இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் தனியார் ஹோட்டல் வழங்க உள்ள உணவு பட்டியலின் விலை ஹோட்டலில் வழங்கப்படும் உணவு பட்டியலின் விலையை மிக குறைவாக இருக்கும். குறிப்பாக, 100 ரூபாய்க்கு கடாய் பன்னீர், காய்கறி கலவை, பச்சி, டால் சுல்தானி, பட்டாணி புலாவ், சப்பாத்தி, பச்சை காய்கறிகள், வெள்ளரி புதினா ரைத்தா, பாப்பாட் மற்றும் கலா ஜமுன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும், 50 ரூபாய்க்கு கிடைக்கும் மினி தாலியில், காய்கறி கலவை, பச்சி, டால் சுல்தானி, ஜீரா புலாவ் ,சப்பாத்தி, பச்சைக்காய்கறிகள், பட்டாணி புலாவ், வெள்ளரி புதினா ரைத்தா, பாப்பாட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
நொறுக்குத் தீனி உள்ளிட்ட 7 வகை உணவுகளுடன் காய்கறி மற்றும் மினி தாலியும் வழங்கப்படுகின்றன. 25 ரூபாய்க்கு நொறுக்குத்தீனியுடன் உப்புமாவும் இணைந்து கிடைக்கிறது. 50 பன்னீர் பக்கோடா 10 ரூபாய்க்கு சமூசா உள்ளிட்ட பல்வேறு உண்வுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு அமர்விற்கும் 5000 நபர்களுக்கு உணவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.