பிரபாஸ்க்கு ஜோடியான ஸ்ருதிஹாசன்.. கே ஜி எஃப் இயக்குனர் இயக்கும் படம்..
சரித்திர படம் பாகுபலிக்கு பிறகு ஆக்ஷன் படமாக சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதையடுத்து காதல் படமாக உருவாகும் ராதே ஷ்யாம் படத்தில் நடிக்கிறார். அடுத்து நடிக்கும் ஆதிபுருஷ் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிறது. நாக் அஸ்வின் படம் மற்றொரு களத்தில் உருவாகிறது.கே ஜி எஃப் போல் ஆக்ஷன் அதிரடி படம் ஒன்றில் பிரபாஸ் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வந்தனர். ரசிகர்களின் எண்ணத்தை உடனே நிறைவேற்ற எண்ணிய பிரபாஸ் உடனடியாக கேஜிஎஃப் பட இயக்குனருடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தார்.
இப்படத்தை விரைவாக நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளார். இப்படத்துக்குச் சலார் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் இப்படத்தின் படம் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நண்பரான யஷ் இப்பட பூஜையில் பங்கேற்க கர்நாடகாவிலிருந்து வந்திருந்தார். அவரை பிரபாஸ் வரவேற்றார். இருவரும் அருகருகே நிற்கும் புகைப்படத்தைப் போட்டிப் போட்டு படம் எடுத்தனர். அப்படங்கள் நெட்டில் வைரலானது.
விஜய் கிரகன்டுர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் இந்த மிகப்பெரிய ஆக்ஷன் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது முதலே, ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் பிரபாஸ், ஒரு வன்முறை மிகுந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சலார்' திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது.கே ஜி எஃப் 2 படத்துக்கு அமைத்தது போன்ற வித்தியாசமான அரங்கைச் சலார் படத்துக்கு அமைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இதுவரை ஸ்டை லாக அழகாக தோன்றி ஹீரோயிசம் செய்துக் கொண்டிருந்த பிரபாஸுக்கு இப்படத்தில் முரட்டுத்தன மான தோற்றத் தை வழங்கி இருக்கிறாராம் இயக்குனர்.இப்படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று சலார் படக்குழு இதனை அறிவித்துள்ளது. ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு முடிவடைந்தது.