சசிகலாவை கலாய்த்த பிரபல நடிகர்.. ஆடியோ விழாவில் கலகலப்பு..

மாணவ, மாணவிகள் நடித்துள்ள குழந்தைகள் படம் சில்லு வண்டுகள். இப்படத்தை சுரேஷ் கே.வெங்கிட இயக்கி உள்ளார். தேவா இசை அமைத்திருக்கிறார். தி.கா. நாராயணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது. தயாரிப்பாளர் கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், ஜாகுவார் தங்கம் தேவா, எஸ்.வி.சேகர், விஜயமுரளி கலந்துகொண்டு வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியை டிவி தொகுப்பாளினி சசிகலா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய எஸ்.வி. சேகர் தொகுப்பாளினியை வைத்து சசிகலாவை கிண்டல் செய்தார். எஸ்.வி. சேகர் பேசியதாவது: சில்லு வண்டுகள் பாடல் திரையிடப்பட்டது. நன்றாக இருந்தது. டிவிக்கும் சினிமாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. டிவியில் சீரியல் பார்ப்பவர்கள் அழுவார்கள், சினிமாவில் படம் தயாரிப்பவர்கள் அழுவார்கள்.

சில்லு வண்டுகள் படத்தில் குழந்தைகள் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நன்கு படிக்க வேண்டும். படிப்பு மிக முக்கியம் என்பது அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் நடிக்கும் குழந்தைகள் எவ்வளவோ பேர் படிக்க வசதி இல்லாமல் இருக்கிறார்கள். காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களும் வறுமையில் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் என்னுடைய டிரஸ்ட்டிலிருந்து நான் ஒருவருடம் படிப்புக்கு பணம் கட்டி இருக்கிறேன். என்னை பார்த்து நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். ஏன் அப்படி கேட்கிறார்கள். இத்தனை வருடம் நடித்துக் கொண்டு தானே இருக்கிறேன். சினிமாவில் இப்போது ஏன் நடிப்பதில்லை தெரியுமா? யாரும் என்னை கூப்பிடுவதில்லை. வேறு காரணம் எதுவும் இல்லை. கூப்பிட்டால் நடிப்பேன். இந்த ஆடியோ விழா தொடங்க காலதாமதம் ஆகிக்கொண்டிருந்தது. ஏன் என்று கேட்டேன்.

சசிகலா வரவில்லை என்றார்கள். அவர் நேற்றே வந்துவிட்டாரே என்றேன். இல்லை இப்போது தான் வந்துக் கொண்டிருக்கிறார் என்றார். கடைசியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி பெயர் சசிகலா என்றார்கள். இந்த மேடையில் அவர் மைக்முன் பேசும்போது ஒருவர் அவர் காலில் விழுந்து விட்டு சென்றார். இங்குமா இப்படி என்று தோன்றியது. கடைசியில் அந்த நபர் காலில் அணிந்திருந்த ஷூ லேஸை சரி செய்து கொண்டிருந்தாராம். தமிழக அரசு எல்லாவற்றிலும் முன்னோடியாக இருக்கிறது. சினிமாவும் அதுபோல் முதலிடத்துக்கு வர வேண்டும். சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியானது. அப்படம் சில நாட்களிலேயே ரூ 100 கோடி வசூலித்தது, சினிமாவுக்கு மீண்டும் ரசிகர்களை அப்படம் வரவழைத்திருக்கிறது அதற்காக நன்றி. இவ்வாறு எஸ்.வி.சேகர் பேசினார்.

More News >>