ஜாவா முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை!
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் BECIL.லிருந்து காலியாக உள்ள Programmer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: இளநிலை கணிணி துறையில் அல்லது தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை கணிணி பொறியியல் முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
Good knowledge and experience of designing and developing software applications using JAVA and other open-source software with
minimum one year experience of developing high volume software having knowledge of Database such as MYSQL, etc.
ஊதியம்: 36,924/-
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினர் - Rs.750/- (Rs. 500/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Rs.750/-(Rs. 500/- கூடுதல் விண்ணப்பிக்கு)
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்- Rs.450/-(Rs. 300/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)
பணி சேவை புரிந்தவர்களுக்கு- Rs.750/-(Rs. 500/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)
பெண்கள் - Rs.750/-(Rs. 500/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் - Rs.450/-(Rs. 300/- கூடுதல் விண்ணப்பங்களுக்கு)
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் இணையவழி மூலம் 15.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/01/e113e7aa3b09a049e1eaf106472dd33d.pdf