சத்துமிக்க அவரைக்காய் வெந்தக்கீரை கூட்டு ரெசிபி செய்வது எப்படி??
வெந்தய கீரையில் ஏராளனமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் உடல் ஆரோக்கியம் பல மடங்கு பெருகும். சத்தான உணவுகளை தேர்ந்தேடுத்து சாப்பிடும் பொழுது உடலில் பல ஆரோக்கிய மாற்றங்களை உணரலாம். சரி வாங்க அவரைக்காய் வெந்தயக்கீரை செய்வது எப்படி குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:-அவரைக்காய் -1 கப் பாசி பருப்பு - 1/2 கப் வெந்தயக்கீரை - 1/2 கப் உப்பு -தேவையான அளவு தேங்காய் -சிறிதளவு சீரகம் -1 ஸ்பூன் காய்ந்த மிளகாய் -3பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன்
செய்முறை:-முதலில் கீரையை ஆய்ந்து சுத்தமான தண்ணீரில் அலசி கொண்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுத்து அவரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கூட்டுக்கு தேவையான தண்ணீர் விட்டு பாசிப்பருப்பு மற்றும் அவரைக்காயை சேர்த்து வேக வைக்கவும்.
மிக்சியில் தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும். அவரை மற்றும் பருப்பு வெந்தவுடன் அரைத்து வைத்த விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியில் நறுக்கிய வெந்தய கீரையை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும். வெந்தய கீரை வேக பாத்திரத்தில் இருக்கும் சூடே போதுமானது.
பயன்கள்:-அவரைக்காய் வெந்தய கீரை கூட்டை சாப்பிடுவதால் ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும். இதனால் அனீ மிக் பிரச்சனை நம்மை நெருங்கவே முடியாது.