போல்ட், கெய்ல், ரஸ்ஸல் சக்ஸஸ் ரகசியம் என்ன..?
உசேன் போல்ட், கிறிஸ் கெய்ல், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்றோரின் உடற்சக்திக்கான ரகசியம் என்ன என்பது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. பல புதிய மாற்றங்களால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வெகு விமர்சையாக இருக்கிறது. குறிப்பாக தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டன் ஆனதும், அஷ்வின் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆனதும் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்-ன் 13-வது போட்டி டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆபார வெற்றி பெற்றது. இதில் கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 12 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
ஆட்டம் முடிந்த பின்னர் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் ரஸ்ஸலை பேட்டி கண்டார். தினேஷ், `ஜமாய்க்காவில் இருந்து வந்த உசேன் போல்ட், கிறிஸ் கெய்ல், நீங்கள் எல்லாம் அசாத்திய உடல் வலிமையுடன் இருக்கிறீர்கள். அதன் ரகசியம் என்ன?’ என்றார்.
அதற்கு ரஸ்ஸல், `எங்கள் உணவு முறை ஒரு காரணமாக இருக்கலாம். அங்கு கிடைக்கும் பிரஷ்ஷான பழங்கள், இறைச்சி போன்றவை எங்கள் ஆற்றலுக்கு பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, அக்கி என்னும் பழம் அங்கு ரொம்ப பிரபலம். அதைச் சாப்பிடுவது முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்’ என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com