நாவலை தழுவி உருவாகும் தமிழ் படங்கள்.. வெற்றிமாறன் வரிசையில் மற்றொரு இயக்குனர்..

வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் ஆட்டோ சந்திரன் எழுதிய லாக்கப் நாவலை தழுவி எடுக்கப் பட்டது. அதேபோல் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் பூமணியின் வெக்கை நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. அடுத்து உருவாகி வரும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை தழுவி உருவாக்கப்படுகிறது.

இதற்கு முன்பாக சிவாஜி காலத்திலேயே அதாவது 1960களியே நாவல் தழுவி படங்கள் உருவாகி இருக்கின் றன. சிவாஜி- பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலை தழுவி எடுக்கப் பட்டது. இதனை ஏபி.நாக ராஜன் இயக்கினார். சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் என்ற நாவல் பிறகு ஆனந்த தாண்டவம் படம் உருவானது. ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா இயக்கினார். ஜெயகாந்தன் எழுதிய அக்னி பிரவேசம் நாவல் பிறகு சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படமானது. ஏ.பீம்சிங் இயக்கினார்.

மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை நாவலை தழுவி எடுக்கப்பட்டது. பாலா இயக்கிய நான் கடவுள் எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை தழுவி உருவானது. இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்போது மற்றொரு படம் நாவலை தழுவி உருவாகிறது.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக அமைதிப்படை-2கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இதில் 'மிக மிக அவசரம் படத்தை தயாரித்ததுடன் இந்தப் படத் தின் மூலம் இயக்குநராக வும் வெற்றி பெற்றார்..

இந்தநிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் டி ஆர் நடிக்கும் மாநாடு என்கிற படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. அரசியல் கதைக்கள பின்னணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தை தானே இயக்கவுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ஒரு இளம் பெண் காவலர் தனது பணியில் அன்றாடம் சந்திக்கும் அவலங்களை நெற்றிப்பொட்டில் அறைந்தது போல மிக மிக அவசரம் படத்தை இயக்கிய, சுரேஷ் காமாட்சி, தனது அடுத்த படத் திலும் அதேபோன்ற யதார்த்த வாழ்வியல் ஒன்றையே படமாக்க இருக்கிறார்.

கிராமத்துப் பின்னணியில், வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வியலை மையமாக வைத்து, உணர்வுப்பூர்வமான கதைகளை எழுதிவருபவர் பிரபல எழுத்தாளர் ம.காமுத்துரை. இவர் எழுதிய முற்றாத இரவொன்றில் என்கிற நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கி றது. இந் நாவலைப் படமாக் கும் உரிமையை ம.காமுத்து ரையிடம் இருந்து முறைப்படி பெற்றுள்ளார் சுரேஷ் காமாட்சி. விரைவில் நடிகர் கள், தொழில் நுட்பக் கலை ஞர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

More News >>