இணையத்தில் தேடப்படும் நபரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம்!
மத்திய நிதியமைச்சகத்தில் முக்கியமாக பேசப்படும் நபர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம். யார் அந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் என்பதை பார்ப்போம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்குவது முதல் பொருளாதார ஆய்வறிக்கையை தயார் செய்வது வரை முக்கிய நபராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் திகழ்கிறார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் கான்பூர் ஐஐடியில் பொறியியல் மற்றும் கொல்கத்தா ஐஐஎம்-இல் தொழில் மேலாண்மை மேல்படிப்பு உள்ளிட்ட படிப்புகளை கிருஷ்ணமூர்த்தி முடித்துள்ளார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆப் பிசனஸில் நிதி பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டம் பெற்ற கிருஷ்ணமூர்த்தி, ஐதராபாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 2018-ம் ஆண்டு நிதியமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார். நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்ற பிறகு தான் எகனாமிக் சர்வே என்று அழைக்கப்படும் பொருளாதார ஆய்வறிக்கை நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து எவ்வாறு இந்தியா மீண்டு வருகிறது என்பது குறித்தும் பொருளாதார ஆய்வறிக்கையில் விரிவாக கிருஷ்ணமூர்த்தி விளக்கியுள்ளார்.