புல்லட் காயங்களா... நவரீத் சிங் பிரேத பரிசோதனை என்ன சொல்கிறது?

டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் உயிரிழந்த நவரீத் சிங் உடலில் புல்லட் காயங்கள் இல்லை என்று பிரேத பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 65 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு பிடிவாதமாகவுள்ளது. விவசாயிகளும் போராட்டத்தை கைவிடபோவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளனது. இதற்கிடையே, கடந்த ஜனவரி 26-ம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் ஒரு கட்டத்தில் செங்கோட்டையை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் தங்கள் அமைப்பு கொடியை ஏற்றினர்.

தொடர்ந்து, ஆர்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதனால், போராட்டகாரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். இந்த வன்முறை சம்பவத்தில் நவரீத் சிங் என்பவர் உயிரிந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நவரீத் சிங் உயிரிழந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, நவரீத் சிங் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவு நேற்று வெளியான நிலையில், பேரணிக்கு வந்த டிராக்டர் மோதியதில், நவரீத் சிங், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். அவரது உடலில், துப்பாக்கி குண்டு தாக்கிய காயங்கள் ஏதும் இல்லை என்று உத்தரபிரதேசத்தில் ராம்பூர் மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நவ்ரீத் சிங் தந்தை சஹாப் சிங் கூறுகையில், விபத்து காரணமாக அவர் இறந்துவிட்டார் என்று சந்தேகிக்கப்படுகிறது. நவ்ரீத் சிங்கின் இறுதிச் சடங்குடகள் அனைத்தும் முடிந்ததும், வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு பின் இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசாருக்கு எதிராக புகார் அளிக்கலாமா என்று முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.

More News >>