ஒரே பாட்டில் ரசிகர்களை கொள்ளையடித்த நடிகை.. லிப் லாக் கிஸ் கொடுத்து கிக்..

சில நடிகைகள் இருக்கிறார்கள் அவ்வப்போது படங்களில் வந்து போய்கொண்டிருப் பார்கள் திடீரென்று ஒரு கட்டத்தில் ரசிக உள்ளங்களை லட்சக் கணக்கில் கொள்ளை அடித்துவிடுவார்கள். அது போல் நடிகை சாய்பல்லவி சில படங்களில் சிறிய பாத்தி ரங்களில் நடித்த நிலையில் பிரேமம் படத்தில் டீச்சர் வேடம் ஏற்று ரசிகர்கள் உள்ளங்களை கவர்ந்தார். அப்படியே மாரி 2 படத்தில் தனுஷ் உடன் ரவுடி பேபி பாட லுக்கு குத்தாட்டம் போட்டு இன்னும் இருமடங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இந்தியில் நடித்துவரும் இளம் நடிகை சாக்‌ஷி மாலிக் அவ்வப் போது சில படங்களில் வந்துபோய்க்கொண்டிருந்தார். சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில் போம் டிக்கி டிக்கி என்ற ஒரு பாடல் காட்சியில் நடித்தார். அந்த பாடல் தன்னை புகழுக்கு கொண்டு செல்லும் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அந்தளவுக்கு பாடல் பிரபலமானது. அவரது இணைய தள பக்கத்தில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் குவிந்து அவரை திக்குமுக் காட வைத்தார்கள். எதையும் வெளிப்படையாக செய்வதில் துணிச்சல்காரர் இந்த சாக்‌ஷி மாலிக். மதுவானாலும் காதலானாலும் வெளிப் படையாக ரசிகர்களிடம் பகிர்வார்.

மாடல் அழகியான இவர் டெல்லியை சேர்ந்தவர் என்றாலும் மும்பையில் முகாமிட்டு பட வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறார். இவருக்கு சந்துல் என்ற காதலர் இருக்கிறார். இவர் தொழில் அதிபர் மட்டுமல்ல சினிமா தயாரிப்பாளரும் ஆவார். திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் டேட்டிங்கில் இந்த ஜோடி ஜாலியாக சுற்றி வருகிறது. இருவரும் துபாய்க்கு பறந்த போது இவர்கள் காதல் இன்னொரு கட்டத்தை அடைந்தது. சாக்‌ஷிக்கு தொழில் அதிபர் ஒரு மோதிரத்தை விரலில் அணிவித்து பந்தத்தை உறுதி செய்தார். அடுத்த நொடி சாக்‌ஷியை இழுத்து உதட் டோடு உதடு வைத்து லிப் லாக் கிஸ் அடித்து திணற வைத்தார். இதை எதிர்பார்க் காத சாக்‌ஷி அந்த புகைப்படத் தையும் கையில் ஒரு மது கோப்பையும் வைத்தபடி இதில், போதை ரெட் ஒயினா அல்லது அவரா.? என்று முடிக்காத வரிகளை பதிவிட்டார். அதைக்கண்டு சாக்‌ஷிக்கு அவரது ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

More News >>